பெஜிடா அமைப்பிற்கு எதிராக ஜெர்மனியில் ஆர்ப்பாட்டம்

பெஜிடா அமைப்பிற்கு எதிராக ஜேர்மனியில் 10,000 இற்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றை மேற்கொண்டுள்ளனர்.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிரானதும் இடதுசாரிக்கொள்கைகளைக் கொண்ட அமைப்புமான பெஜிடா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்கள் அமைப்பின் நான்காவது வருடப்பூர்த்தியை கொண்டாடும் முகமாக, பாரிய பேரணியொன்றை ட்ரெஸ்டன் நகரில் மேற்கொண்டுள்ளது.

குறித்த பெஜிடா பேரணிக்கு எதிராகவே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சார்பான பேரணியும் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெஜிடா அமைப்பிற்கு எதிரான பேரணி அமைதியாக மேற்கொள்ளப்படவேண்டுமென செக்சோனி மாநிலத்தின் ஆளுநர் மைக்கல் க்ரெட்ஸ்மெர் வலியுறுத்தியிருந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு லுட்ஸ் பச்மன் என்பவரினால் இஸ்லாமியமயமாக்கத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய அமைப்பே பெஜிகோ ஆகும்.

நேற்று இடம்பெற்ற இரண்டு ஆர்ப்பாட்ட பேரணிகளும் மிகவும் அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதமான சம்பவங்களுமின்றி இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






Related News

  • ஏலத்திற்கு வரும் ஈஃபிள் கோபுரத்தின் பழைய படிக்கட்டு
  • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
  • முதலாம் உலகப்போர் நினைவஞ்சலி விழாவில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே
  • அமெரிக்காவிற்கு பதிலடிகொடுக்க தயாராகிறது ஐரோப்பா
  • ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் செயற்திறனுடன் பணியாற்றுவது அவசியம் – பிரான்ஸ் ஜனாதிபதி
  • ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் நேரமாற்றத்தை அகற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு
  • கோர்சியாவில் சூறாவளி காரணமாக மின்சார துண்டிப்பு
  • அயர்லாந்தின் புதிய ஜனாதிபதி- மைகல் டீ ஹிஜ்ஜின்ஸ்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *