மேற்கு ஆப்கானிஸ்தானில் முக்கியமான மாவட்ட தலைநகரை தலீபான்கள் கைப்பற்றினர்

Thermo-Care-Heating
Afghanistan_13ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் எதிராக சண்டையிட்டு வரும் தலீபான் பயங்கரவாதிகள் அங்கு நாளுக்கு நாள் தங்கள் ஆதிக்கத்தை பெருக்கி வருகின்றனர். அதிபர் அஷ்ரப் கனியின் அமைதி முயற்சிகளை நிராகரித்து போராடி வரும் அவர்கள், ஏறக்குறைய நாட்டின் பாதியளவு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பரா மாகாணத்தில் இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் அங்குள்ள முக்கியமான அனர்தரா மாவட்டத்தின் தலைநகரம் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தலீபான் பயங்கரவாதிகள் அடங்கிய மிகப்பெரிய குழு ஒன்று நேற்று முன்தினம் இரவு பயங்கர தாக்குதலை நடத்தி மாவட்ட தலைநகரை கைப்பற்றியதாக பரா மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளரான நாசர் மெஹ்ரி தெரிவித்தார். எனினும் அங்கு போலீசாரும், உளவுத்துறையினரும் தொடர்ந்து தங்கள் தலைமை அலுவலகங்களிலேயே தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
அனர்தரா நகர் முழுவதும் தலீபான் பயங்கரவாதிகள் வலம் வரும் படங்களை தலீபான் அமைப்பும் வெளியிட்டு உள்ளது. இந்த சண்டையில் 15 போலீசார் கொல்லப்பட்டதாக கூறிய தலீபான் செய்தி தொடர்பாளர் யூசுப் அகமதி, ஏராளமான ராணுவ வாகனங்கள் மற்றும் அதிக அளவில் வெடிபொருட்களை பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
ideal-image

Share This Post

Post Comment