'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களை ஐ.எம்.எச்.ஓ. மீளக் கட்டி எழுப்பி வருகின்றது' -அமைச்சர் எரிக் ஹொஸ்கின்
Apr 28 2012 09:03:21

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தம் தமிழ் குடும்பத்தினருக்கு எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது என்பதனை நாமறிவோம். மிகப் பயங்கரமான அனுபவம். அதற்காக நான் மனம் வருந்துவதோடு எனது அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன். யுத்தத்தினால் பாதிப்படைந்த தமிழ் கிராமங்களை மீளக் கட்டி எழுப்புவதில் சர்வதேச வைத்திய சுகாதார நிறுவனம் முக்கிய பங்ககளிப்பினை செய்து வருகின்றமை சிறந்த சேவையாகும். விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும், வேலை வாய்ப் பின்றி இருக்கும் ஆண்களுக்கு ஓட்டோ றிக்சோக்களையும் வழங்கி அவர்களுக்கு வாழ் வாதாரத்தினை வழங்கி வருவது பாராட்டுக்குரியது”.

மார்க்கம் ஜஸ்மின் ஹோல் மண்டபத்தில் நேற்று மாலை ஆரம்பமாகிய சர்வதேச வைத்திய சுகாதார நிறுவனத்தின் (IMHO.) ஒன்பதாவது வருடாந்த இரு நாள் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஒன்ராறியோ மாகாண அமைச்சர் எரிக் ஹொஸ்கின் இவ்வாறு கூறினார். இம்மாநாட்டிற்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலுள்ள ஐ.எம். எச்.ஓ. உறுப்பினர்களான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி அமைப்பின் ஆரம்ப காலத் தலைவாரான டாக்டர் லம்போதரன் வரவேற்புரை நிகழ்த்தி னார். கனடா வர்த்தக சம்மேளனத் தலைவர் திரு. மயில்வாகனம் அகிலன் உரை யாற்றுகையில் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தமது கடும் முயற்சியி னால் முன்னேறியுள்ள னர். அவர்களது உதவியுடன் ஐ.எம.எச்.ஓ. இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கும் நோயாளிகளு க்கும் பெரும் சேவை ஆற்றி வருகின்றது. அதற்கு நாமும் எம்மாலியன்றளவு ஆதரவு வழங்கி வருகின்றோம். தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனக் கூறினார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றும் டாக்கடர் ஏ.பார்த்திபன் உரையாற்று கையில் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியசாலையில் போதிய இடவசதியோ, உப கரணங்களோ, வாகனங்களோ இல்லை. 418 மார்பு புற்று நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒளிக்கதிர் சிகிச்சை உபகரணம் இல்லை எனக் கூறினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்த டாக்டர் சிவயோகம் உரையாற்றிய போது யாழ்ப்பாண மக்கள் தங்கள் சுய அடையாளத்தையும் நம்பிக்கையையும் இழந்து விரக்தியோடு வாழ்கின்றனர். தமது குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்தோரும் இன்று மௌனித்து விட்டார்கள். யாழ் மக்களுக்கு உதவுவதில் ஐ.எம்.எச்.ஓ ஆற்றி வரும் சேவை மகத்தானது எனக் கூறினார். மற்றும் பல டாக்டர்களும் உரையாற்றினார்கள்

 

 

 
May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்

Read More >

May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்

Read More >

May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.

Read More >

May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்

Read More >

May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி

Read More >

May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்

Read More >

May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்

Read More >

May 17 2013 09:23:12 [Canada]
ஒன்றோரியோவின் அனைத்து நகரப்புறப் பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை தொட்டியில் போடும் போது தெள்ளத் தெளிவான பாலித்தீன் பைகளையே உபயோகப்படுத்த வேண்டும்

Read More >