இலங்கை பெற்றோருக்கு பெருமை சேர்த்த கனேடிய தமிழன்!

இலங்கையில் தனது பெற்றோர் பயன்படுத்திய கார் போன்று, பல வருட முயற்சியின் பயனாக மீளவும் கனேடிய தமிழர் ஒருவர் தயாரித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஸ்ரீ இராமலிங்கம் என்பவரே பழமை வாய்ந்த காரை தற்போது தயாரித்துள்ளார்.

கனடாவில் இன்று நடைபெறும் தமிழர் திருவிழாவின் போது அந்த காருடன் இராமலிங்கம் பெருமையாக அங்கே வந்து நிற்பார் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் Austin மோட்டார் வாகன நிறுவனத்தினால் இளம் பச்சை நிறத்திலான A40 Somerset என்ற இந்த 1950ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

இராமலிங்கத்தின் சிறுவனாக இருக்கும் போது, இதே போன்றதொரு காரை அவரது பெற்றோர் இலங்கையில் பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது கனடாவில் வசிக்கும் இராமலிங்கம் கனேடிய வானொலி ஒன்றுக்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.

அந்த செவ்வியில், எனக்கு 6 அல்லது 7 வயதிருக்கும் போது எனது பெற்றோர் இதே போன்றதொரு காரை பயன்படுத்தினார்கள். நான் அப்போது அந்த காரின் வேகமானியை பிடித்து கொள்வேன்.

ஒரு நாள் இந்த ரக கார் ஒன்று உடைந்த நிலையில் வீடொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அவதானித்தேன். நான் அங்கு சென்று இந்த காரை விற்பனை செய்வீர்களா என்று கேட்டேன்.

அந்த காருக்கான முற்பணத்தை செலுத்தி விட்டு உடனடியாக அந்த காருக்கு பொருத்தமான பாகங்களை தேடி சென்றேன். Scarborough பகுதியில் கார் சேவை வியாபாரத்தை மேற்கொள்ளும் எனக்கே அது கடினமாக ஒரு விடயமாக இருந்தது.

நான் நினைக்கின்றேன் 1998ஆம் ஆண்டு இந்த காரை கனடாவுக்கு கொண்டு வந்தேன். அந்த காலப் பகுதியில் இதற்காக பாகங்களை பெற்றுக் கொள்வதென்பது மிகவும் கடினமாக இருந்தது.

பிரித்தானியா சென்ற போது இந்த காருக்கான சில பாகங்களை கொண்டு வந்தேன். பின்னர் நான் மீளவும் இலங்கை சென்றேன். அங்கு இருந்து சில பாகங்களை கொண்டு வந்தேன். நான் இலங்கை செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு பாகங்களை கொண்டு வருவேன்.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக, நானும் எனது ஊழியர்களும் காரை அதன் தற்போதைய நிலைக்கு மீட்டெடுக்க பணியாற்றினோம்.

எனது பெற்றோரின் காருக்கு ஒத்த வகையில் இலங்கை வாகன உரிம தகட்டுடன் வாகன தயாரிப்பு பணிகள் நிறைவுக்கு வந்ததென இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.625.0.560.320.160.600.053.800.700.160.90 ghgrf grhrgh hrghgrh


Related News

 • 6 காசோலைகளை மோசடி செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை
 • மீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை
 • யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை
 • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
 • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
 • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
 • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
 • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *