தாயை கொலை செய்த மகனுக்கு 8 ஆண்டுகள் சிறை – இளஞ்செழியன் தீர்ப்பு

7\30\2016

கல்­முனை சம்­மாந்­து­றையில் 68 வயது நிரம்­பிய தாயாரை தடியால் அடித்து கைமோசக் கொலை செய்த தன­ய­னுக்கு, யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் எட்டு ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­துள்ளார். 

இந்தக் கொலைச் சம்­பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி நடை­பெற்­றுள்­ளது. சார­தா­தேவி என்ற பெண்ணே கொல்­லப்­பட்­ட­வ­ராவார். கனக­சிங்கம் சிவ­குமார் என்­ப­வ­ருக்கு எதி­ராக சட்­டமா அதி­பரால் கல்­முனை மேல் நீதி­மன்­றத்தில் கொலை வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. 

பிர­தம நீதி­ய­ர­சரின் விசேட நிய­ம­னத்தின் அடிப்­ப­டையில் கல்­முனை மேல் நீதி­மன்­றத்தில் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன், இந்தக் கொலை வழக்கில் 29 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை தீர்ப்­ப­ளித்­துள்ளார். வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்­ட­வாதி லாபிர் சாட்­சி­களை நெறிப்­ப­டுத்­தினார். எதிரி தரப்பில் சட்­ட­வாதி லியாகத் அலி நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கினார்.  

 மர­ண­ம­டைந்த சார­தா­தே­வியை 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி, எதிரி கிளி­சி­ரியா தடி­யாலும் பனை மட்­டை­யாலும் அடித்து கொலை செய்­த­தாக கண்­கண்ட சாட்­சிகள் நீதி­மன்­றத்தில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தெரி­வித்­தனர். 

இறந்­த­வரின் தலை, கழுத்து, நெஞ்சு, அடி­வ­யிறு மற்றும் எலும்­பு­களில் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது எனவும் சிறி­த­ளவு கூர் கொண்ட மொட்­டை­யான ஆயுதத் தாக்­குதல் கார­ண­மாக மரணம் சம்­ப­வித்­துள்­ளது என மருத்­துவ பரி­சோ­தனை நடத்­திய வைத்­தியர் சாட்­சி­ய­ம­ளித்தார். 

இந்தக் கொலைச் சம்­பவம் குறித்து எதிரி கன­க­சிங்கம் சிவ­குமார் எதி­ரிக்­கூண்டில் நின்று வாக்­கு­மூ­ல­ம­ளித்தார். நான் சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்தேன். அப்­போது எனது தாய் கெட்ட வார்த்­தை­களால் என்னைப் பேசினார். எனக்குக் கோபம் வந்­தது. அந்தக் கோபத்தில் வேலியில் இருந்த கிளி­சி­ரியா தடியைப் பிடுங்கி இரண்டு மூன்று அடி அம்­மாவை அடித்தேன் அடித்­ததும் அவர் மயங்­கி­விட்டார்.

அதன் பின்னர் அவரைத் தூக்கிச் சென்று வீட்டு மண்­ட­பத்தில் வளத்­தி­விட்டு, தண்ணீர் எடுத்து வந்து அவ­ரு­டைய முகத்தில் தெளித்தேன் ஆனால் அவர் எழும்­ப­வில்லை. எனது தாயார் என்னை கெட்ட வார்த்­தை­க­ளினால் பேசி கோபப்­ப­டுத்­தி­யதால் தான் திடீ­ரென அம்­மாவைத் தாக்­கி­விட்டேன் என குற்­றத்தை ஒப்­புக்­கொண்டு வாக்­கு­மூ­ல­ம­ளித்தார்.

அதே­வேளை, எதிரி தரப்பு சட்­டத்­த­ரணி எதிரி மீது கருணை காட்­டு­மாறு கருணை விண்­ணப்பம் செய்தார். 

விசா­ர­ணை­களின் முடிவில் திடீர்க் கோபம் கார­ண­மாக இடம்­பெற்ற கைமோசக் கொலை­யாக இக்­கொலைச் சம்­பவம் நடை­பெற்­றுள்­ள­தா­கவும் எனினும் இந்த வழக்கில் பல விட­யங்­களைக் கவ­னத்திற் கொள்ள வேண்­டி­யுள்­ளது என்று நீதி­பதி இளஞ்­செ­ழியன் தனது தீர்ப்பில் தெரி­வித்தார். 

அவர் வழங்­கிய தீர்ப்பில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தாயாரை அடித்துக் கொல்லும் எண்ணம் எதி­ரிக்கு இருக்­க­வில்லை. தாயார் கெட்ட வார்த்­தை­க­ளினால் அவரைக் கோபப்­ப­டுத்­தி­யதே இந்தக் கொலைக்குப் பிர­தான கார­ண­மாக உள்­ளது. 

ஆயினும் இறந்­த­வரின் நிலைமை, கொலைச்­சம்­பவ நிகழ்வு குறித்து எதிரி கூறி­யுள்ள நிகழ்­வுகள் மற்றும் நடை­பெற்­றுள்ள சம்­ப­வத்தின் பார­தூரத் தன்மை என்­ப­வற்றை நீதி­மன்றம் கவ­னத்தில் எடுத்து பரி­சீ­லித்­துள்­ளது. இந்தப் பரி­சீ­ல­னையின் அடிப்­ப­டையில் தாயாரைக் கொன்ற இந்த வழக்கில் எதிரி கைமோசக் குற்­ற­வாளி என இந்த நீதி­மன்றம் காண்­கின்­றது. 

இறந்­தவர் தாயா­ராவார். கொலை செய்­தவர் மகன். இந்தக் கொலையை நேரில் கண்­ட­தாக கண்­கண்ட சாட்­சி­ய­ம­ளித்­தவர் தந்­தை­யாவார். எனவே, ஒரு குடும்­பத்தின் உணர்­வு­பூர்­வ­மான வழக்கில் தீர்ப்­ப­ளிக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. 

கைமோசக் கொலைக் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­ப­டு­கின்ற எதி­ரிக்கு இந்த நீதி­மன்றம் எட்டு ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்­கின்­றது. எதிரி பத்­தா­யிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும்.

அதனைச் செலுத்தத் தவறினால் மூன்று மாதம் சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பையடுத்து தண்டனை வழங்கப்பட்ட எதிரியை சிறைக்காவலர்கள் பொறுப்பெடுத்து நீதிமன்றத்தில் இருந்து நேரே மட்டக்களப்பு சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர்


Related News

 • இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்
 • புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்
 • விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 07ம் திகதி
 • துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பண்டா உயிரிழந்தார்
 • இரண்டாவது நாளாகவும் CIDயில் ஆஜரான நாலக டி சில்வா
 • கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்
 • மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை
 • நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யலாம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *