இளைய தளபதியின் தெறி 42 தகவல் – பிறந்தநாள் ஸ்பெஷல்

ekuruvi-aiya8-X3

இளைய தளபதி விஜய் 6லிருந்து 60வரை இவருடைய துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர். எத்தனை தடைகள், துயரங்கள் வந்தாலும் மெல்லிய புன்னகையால் கடந்து தெறி வெற்றியை கொடுத்து அடுத்து அதே மெல்லிய புன்னகையுடன் கடந்து விடுவார். இவரின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் குறித்த 42 தகவல்கள் இதோ..

1) விஜய் 1984ம் ஆண்டு தன் தந்தை இயக்கத்திலேயே வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அப்போது சிம்பாளிக்காக டைட்டில் வைத்திருக்கிறார் பாருங்கள் இயக்குனர்.

2) விஜய் தீவிர ரஜினி ரசிகர், அதுவும் அவர் நடித்த அண்ணாமலை படத்தை திரும்ப திரும்ப பார்த்து ரசிப்பாராம், அந்த படத்தில் இடம்பெறும் சவால் விடும் காட்சியை பேசி தான் தன் அப்பாவிடம் விஜய் நடிக்க சம்மதம் வாங்கினாராம்.

3) விஜய் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது இவர் மீது வராத விமர்சனங்களே இல்லை, பல பத்திரிக்கைகள் இவரை திட்டினார்கள், குறிப்பாக இவருக்கு நடனமே ஆட வரவில்லை என்று கூறினார்கள், இதற்கு பதில் நாங்கள் சொல்ல வேண்டுமா?.

aykWVx5Ufhajdfhja4) விஜய் சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்துவிட்டது.

5) இவரது கல்லூரி நண்பர்களான சஞ்சீவுடன் இவர் இணைந்து பல கலாட்டாக்களை செய்துள்ளார், இதை நண்பன் படத்தில் ப்ரோமோஷனில் சஞ்சீவ் கூறியுள்ளார்.

6) விஜய் மிகவும் ஜாலி டைப், எப்போதும் கலகலவென இருப்பார், அவர் தங்கையில் மரணம் தான் அவரின் இத்தனை அமைதிக்கு காரணம்.

7) விஜய் பிறந்த மருத்துவமனையில் அதே தேதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு வருடா வருடம் சென்று மோதிரம் அணிவிப்பாராம்.

8) விஜய் எப்போதும் தன் ரசிகர்களிடம் தொடர்பிலேயே இருக்க வேண்டும் என்று நினைப்பாராம்.

9) சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு பெரிதாக ஈடுபாடு இல்லை, தன்னை பற்றி இப்படி பேசுகிறார்கள் என்றாலும் ‘விடுங்க நண்பா’ என கூறிவிட்டு சென்று விடுவாராம்.

10) எப்போதாவது தன் அதிகாரப்பூரவ டுவிட்டர் பக்கத்தை பார்வையிடுவாராம்.

11) விஜய் என்ன தான் தந்தை இயக்கத்தில் பல படங்கள் நடித்தாலும் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக தான் பெரிய ப்ரேக், இதற்காகவே பல இடத்தில் இதை கூறுவார்.

12) விஜய் தன் நண்பர்களையும் தன்னுடன் பல படங்களில் நடிக்க வைத்துள்ளர்.

13) துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடித்த டவுசர் பாண்டியை விஜய்க்கு மிகவும் பிடிக்கும், அவரின் மரணம் விஜய்யை மிகவும் பாதித்தது, அவர்களின் குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார்.

14) விஜய் நடத்திற்காக பெரிதும் ஒத்திகை ஏதும் பார்க்கவே மாட்டாராம், நடன இயக்குனர் ஆடுவதை ஒன்று, இரண்டு முறை பார்த்துவிட்டு ஸ்கிரீனில் பட்டையை கிளப்பிவிடுவாராம்.

15) விஜய்க்கு மிகவும் பிடித்த ஹீரோயின் சிம்ரன் தான், அவருடன் நடனமாட தான் எப்போதும் எனக்கு பயம் என்று கூறியுள்ளார்.

16) விஜய்க்கு முழு நீள ஆக்‌ஷன் ஹீரோவாக ஆக வேண்டும் என்பதே விருப்பமாம், அதை நிறைவேற்றிய ‘திருமலை’ ரமணா மற்றும் ‘கில்லி’ தரணிக்கும் அடுத்தடுத்து கால்ஷிட் கொடுத்தார்.

17) அதேபோல் இயக்குனர் ரமணா உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது விஜய் தான் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

18) விஜய் இதுவரை தமிழ் சினிமாவில் 21 அறிமுக இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்துள்ளார்.

19) விஜய் நடிகர் மட்டுமின்றி நல்ல பாடகரும் கூட, இதுவரை விஜய் 31 பாடல்களை பாடியுள்ளார்.

20) 15 இசையமைப்பாளர்கள் இசையில் பாடி அசத்தியுள்ளார்.

21) விஜய் எப்போதும் முழுக்கதையும் கேட்டு தான் படத்தில் நடிக்க சம்மதிப்பாராம்.

22) விஜய்க்கு பைக் ரைடு என்றால் மிகவும் பிடிக்குமாம், இரவு நேரங்களில் அல்லது ஹெல்மட் அணிந்து பைக்கில் அடிக்கடி உலா வருவாராம்.

23) அதேபோல் தான் நடித்த படங்களில் முதல் நாள் காட்சியை யாருக்கும் தெரியாமல் ரசிகர்களோடு ரசிகர்களாக விஜய் பார்ப்பாராம்.

24) விஜய்க்கு எந்த நடிகரின் படம் பிடித்தாலும் உடனே போன் செய்து பாராட்டி விடுவாராம், சமீபத்தில் விஜய்க்கு ப்ரேமம் நிவின் பாலி பேவரட்.

25) கவுண்டமணி அவர்களின் தீவிர ரசிகரும் கூட விஜய், அவரின் காமெடி காட்சிகளை விரும்பி பார்ப்பார்.

26) விஜய்க்கு எப்போது பேப்பர் படிக்கும் பழக்கம் இல்லையாம், மற்றவர்கள் கூறும் செய்தியை கேட்டறிந்து அதில் பாசிட்டிவ் மட்டும் மனதில் ஏற்றிக்கொள்வாராம்.

27) தன்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்து வருபவர்களுக்கு வீடு கட்டி தந்தது மட்டுமில்லாமல், பல உதவிகளை அவ்வப்போது செய்து வருவாராம்.

28) இதற்கெல்லாம் மேலாக தன் பிஆர்ஓ வாக இருந்த பி.டி.செல்வகுமாரையே புலி படத்தின் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

29) விஜய் இந்த வயதிலும் இத்தனை இளமையாக இருக்க முக்கிய காரணம் அவருடைய டயட் கண்ட்ரோல் தான், எப்போதும் குறைவாகவே தான் சாப்பிடுவாராம், அவை எத்தனை பிடித்த உணவாக இருந்தாலும்,

30) மாதம் ஒரு முறை எப்படியாவது தன் ரசிகர்களை சந்தித்து பேசி விடுவாராம்.

31) விஜய்யின் பேவரட் டிஷ் மீன் தானாம், மட்டன் பிடிக்கவே பிடிக்காதாம்.

32) விஜய் தன் மகளை எப்போதுமே பேபி என்று தன் அழைப்பாராம், அதை தான் தெறி படத்திலும் பயன்படுத்தியுள்ளார்கள்.

33) சினிமாவில் போட்டி இருந்தாலும் நேரில் அஜித்துடன் நெருங்கிய தொடர்பில் தான் இருப்பாராம், அவரின் படங்களை தொடர்ந்து பார்த்து கருத்தும் தெரிவிப்பாராம், மங்காத்தா படத்தை பார்த்த பிறகு வெங்கட் பிரபுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

34) விஜய்யை சந்திப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை, தான் ஊரில் இருந்தாலும் இல்லை அப்புறம் வர சொல்லுங்கள் என்று கூறவே மாட்டாராம், எப்படியும் பார்த்துவிடுவாராம்.

35) பெரும்பாலும் பேஷனுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுக்க மாட்டாராம், ஏனெனில் சிம்பிளாக இருப்பதையே இவர் விரும்புவார்,

36) விஜய் எப்போது காட்டன் உடைகளை தான் விரும்பி அணிவாராம்.

37) விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது 11ம் வகுப்பு படிக்கின்றார், கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார், விஜய்க்கு சஞ்சய் பெரிய கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பதே விருப்பம்.

38) விஜய் அழகிய தமிழ் மகன் டூ சுறா படம் வரை பல தோல்விகளை அடைந்தார், காவலன் வெளியீட்டில் பிரச்சனை என மிகவும் கடினமான நேரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களை என்றும் மறக்க மாட்டேன் அவர்களுக்காகவே மீண்டு வருவேன் என இவர் நடித்த படம் தான் துப்பாக்கி, விட்ட இடத்தை ஒரே படத்தில் பிடித்தார்.

39) தமிழ் சினிமாவில் 3 முறை 100 கோடி வசூல் செய்த நாயகன் என்ற பட்டம் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு மட்டுமே.

40) விஜய்க்கு தமிழகத்தில் இருக்கும் ரசிகர்கள் அளவிற்கு கேரளாவிலும் உள்ளது, இவரின் 3 படங்கள் அங்கு ரூ.10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

41) சமீபத்தில் வந்த தெறி UKவில் எந்திரன் வசூல் சாதனையை முறியடித்தது.

42) விஜய்-60 படத்தின் டைட்டில் பெரும்பாலும் ஒரு பேமஸ் எம்.ஜி.ஆர் படத்தின் டைட்டில் தான் என தெரிய வந்துள்ளது.

Share This Post

Post Comment