யுத்தத்தில் முகத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை!

Facebook Cover V02

image-745051யுத்தத்தில் முகத்தில் காயமடைந்து சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் மக்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர் அறிவித்துள்ளனர்.

குறித்த சத்திரசிகிச்சையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவின் மாவட்ட ஆளுநர் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

சர்வதேச லயன்ஸ் கழகமானது, தனது மனித நேயப் பணியின் 100 ஆவது ஆண்டை நிறைவு செய்வதை முன்னிட்டு இவ்வாறான சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிகட்ட யுத்தத்தின் போது முகத்தில் காயம் ஏற்பட்ட பலர் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்வதாகவும் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் லயன்ஸ் கழக உறுப்பினர் வைத்தியர் அமுதா கோபாலன் தெரிவித்தார்.

இதனால் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்துகொள்ள விரும்புபவர்கள், 5ஆம் திகதிக்கு முன்பு 0718186185 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share This Post

Post Comment