இளவரசி துப்பாக்கியால் சுட்டதில் கேட்கும் திறனை இழந்த பிரதமர்!

sdsd

Belgian-PM-suffers-hearing-loss-after-princes-fires-gun-nearபெல்ஜியம் நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்த அந்நாட்டு இளவரசி, துப்பாக்கியால் சுடும் போது வெளிவந்த சப்தம் தாங்காததால் அருகிலிருந்த பிரதமர் கேட்கும் திறனை இழந்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்த அந்நாட்டு இளவரசி, துப்பாக்கியால் சுடும் போது வெளிவந்த சப்தம் தாங்காததால் அருகிலிருந்த பிரதமர் கேட்கும் திறனை இழந்துள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் புருசெல்சில் 20 கிலோ மீட்டர் மராத்தான் ஓட்டப்பந்தையம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற இருந்தது. இதை தொடக்கி வைப்பதற்காக அந்நாட்டு மன்னர் பிலிப்பின் இளைய சகோதரி ஆஸ்ட்ரிட் மற்றும் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் வருகை தந்திருந்தனர். விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு அடையாளமாக இளவரசி ஆஸ்ட்ரிட் சிறிய ரக பிஸ்டல் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார்.

பிஸ்டலில் இருந்து வெளிவந்த சப்தம் தாங்காததால் அருகே நின்று கொண்டிருந்த பிரதமர் சார்லஸ் தன்னுடைய கேட்கும் திறனை இழந்துள்ளார். இதனையடுத்து, கடந்த சில நாட்களாக வழக்கமான பணிகளை பிரதமர் மேற்கொண்டு வந்தாலும் இந்த செய்தி நேற்று தான் ஊடகங்களுக்கு கசிந்தன.

இதையடுத்து, பிரதமருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைவார் எனவும் அந்நாட்டு செய்தித்தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பெல்ஜியம் வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சார்லசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், நேட்டோ தலைவர்களுடன் இணைந்து அவர் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment