பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜின் நான்காவது பிறந்தநாள் இன்று

Facebook Cover V02

jorjhபிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜ் இன்று (சனிக்கிழமை) அவரது நான்காவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளதை முன்னிட்டு கென்சிங்டன் அரண்மனை அவரது ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஒளிப்படம் கடந்த ஜூன் மாதம் இறுதிப்பகுதியில் கென்சிங்டன் அரண்மனையில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தனது குறும்பு நடவடிக்கைகள் மூலம் பார்ப்போரை ஈர்த்து வரும் குட்டி இளவரசரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே வேளை தனது தகப்பன் இளவரசர் வில்லியம், தாய் கேட் மிடில்ட்டன் மற்றும் தங்கை சார்லட் ஆகியோருடன் அண்மையில் போலந்துக்கு விஜயம் மேற்கொண்ட குட்டி இளவரசரை காணும் வாய்ப்பு போலந்து மக்களுக்கும் கிட்டயது.

வார்சோ விமான நிலையத்தில் சென்றிங்கிய போது படமாக்கப்பட்ட காணொளிகளில், குட்டி இளவரசர் ஜோர்ஜ் விமானத்தை விட்டு இறங்க தயங்கிய நிலையில், இளவரசர் வில்லியம் அவருக்கு உற்சாகமூட்டி விமானத்தில் இருந்து இறங்க வைத்தது பார்ப்போரை சிரிக்க வைத்தது.

Share This Post

Post Comment