வடக்கு மக்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர்!

Thermo-Care-Heating

maithri-john-kerryவடக்கிலுள்ள கடும்போக்கு இனவாதக்குழுக்களால் வடபகுதியிலுள்ள குறிப்பிட்டளவான மக்கள் தமது சொந்த இடத்திற்குத் திரும்பிச் செல்ல மறுக்கின்றனர் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரியிடம் முறையிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று (புதன்கிழமை) அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரியைச் சந்தித்துப் பேச்சு நடாத்தினார்.

இதன்போது, சிறீலங்காவின் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்துத் தெரிவித்த சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வடக்கிலுள்ள இனவாதக் குழுக்களால் வடக்குப் பகுதியிலுள்ள சிறியளவிலான மக்கள் தமது சொந்த இடத்திற்குச் செல்ல மறுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று, தெற்கிலுள்ள சில இன குழுக்களும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கூட்டு அரசாங்கம், எதிர்ப்புகள் இருந்தாலும், நல்லிணக்க செயல்முறைக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment