இசைக்கு ஏது எல்லை – இசைக்கான சந்தை எம்மிடம் இல்லை – வைரமுத்து சொர்ணலிங்கம்

ekuruvi-aiya8-X3

இசைக்கு ஏது எல்லை தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன ?
 

அந்த இசைநிகழ்வை உற்று அவதானித்து அந்த இசையின் வெளிப்பாடுகளை புரிந்திருந்தால் இந்தக் கேள்விக்கே இடமிருந்திருக்காது. ஒவ்வொரு கிழமையும் ஏதாவது இசைநிழ்வு நடந்து கொண்டுதானிருக்கிறது. ஓன்றில் சினிமாப் பாடல் ஒப்புவிக்கப்படும் அல்லது கர்னாடக இசைப் பாடல் ஒப்புவிக்கப்படும். இரண்டுமே யாரோ எழுதி யாரோ இசையமைக்க யாரோ பாடிய பாடல்கள். ஆனால் இசைக்கு ஏது எல்லை அப்படியானதல்ல. எங்கள் வலிகளை சுகங்களை எங்கள் வாழ்வியலை எங்கள் கவிஞர் வரிகளாக்க எங்கள் கலைஞர்கள் அதற்கு மெட்டமைத்து பாடும் பாடல். வெறுமனே பாடுவதல்ல. பாடகனின் திறமைக்கேற்ப மனோதர்மம் விரிவடையும். கட்டுப்பாடுகளில்லாத இசை. ஆனால் எல்லாப் பாடல்களுமே ஒரு குறித்த இராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். திறமையுள்ள இளம் கலைஞர்கள் தம் சொந்த கற்பனையை வெளிக்கொணரக்கூடிய களம். எமது கலைஞர்கள் தம்மை வளர்த்துக் கொள்வதற்கான் தளம்.

மக்களை கவரும் விதமான நிகழ்ச்சி வடிவமைப்பு சந்தைப்படுத்தல் இல்லாமல் இசையரங்கம் அதன் உயரிய நோக்கத்தை அடைந்து விடும் என்று நம்புகின்றீர்களா ?

இசையரங்கத்தின் நோக்கம் மெல்லிசை ரசிகர்களின் கரம் பற்றி மெல்ல அழைத்து வந்து சாஸ்திரிய நதியில் நீராட்டுவது. இங்கே மெல்லிசையும் இருக்கும் சாஸ்திரிய இசையும் இருக்கும். ஆனால் பாமரனால் கூட இந்த இசையை மெய்மறந்து ரசிக்க முடியும். ஆனாலும் உணவை எடுத்தால்கூட சத்தான, உடலுக்கு ஆரோக்கியமான உணவு ருசிக்காது. அதேபோல் குத்துப் பாடல்களையே கேட்டு பழகிப் போனவர்களுக்கு இந்த இசை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நேரத்தை செலவிட்டு பணத்தை விரயம் செய்து சங்கீதம் படிப்பவர்களும்குமா புரியாது. 5000த்திற்கு மேற்பட்டவர்கள் சங்கீத பரீட்சை எழுதுகிறார்கள். 100 க்கு மேல் ஆசிரியர்கள் இசை கற்பிக்கின்றாhகள்;.  ஆனால் அவர்களுக்கு இந்த நிகழ்வு பற்றி தெரிய வைப்பதற்கு கட்டாயமாக முறையான் சந்தைப் படுத்தல் அவசியம். ஒழுங்கும் தொடர்ச்சியும் இருந்து தரமும் பேணப்பட்டால் எந்த முயற்சியும் வெற்றியளிக்கும்.

கடந்த காலங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் எவை ?

எங்கள் மக்கள் தங்களை சுற்றிவர என்ன நடக்கிறது என்பதை அறியாமலே வாழ்ந்து முடிக்கின்றார்கள். இசையாகட்டும், இலக்கியமாகட்டும், எந்த கலையாகட்டும் அதற்கான சந்தை எம்மிடமில்லை. ஏப்படி 3 இலட்சத்திற்குமேல் வாழும் ஈழத்தமிழனுக்கு சென்று இருந்து சாப்பிட ஒழுங்கான உணவுச் சாலை இல்லையோ அதேமாதிரி எத்தனை திறமையிருந்தாலும் அதற்கு வடிகாலாக அமையக்கூடிய சந்தை எம்மிடமில்லை. அதனால் அதிsornalingamதிறமைமிக்க கலைஞன்கூட ஏனோதானோ வென நிகழ்வுகளை மேடையேற்றுகிறான். திறமைமிக்க கலைஞர்கள் நிறையப் பேர் எம்மிடமிருந்தாலும் உழைப்பு பூஜ்யம். ஆப்படியான அரைகுறை ஆக்கங்களை பார்க்கும் ரசிகர்களும் எல்லா ஈழத்தமிழர்களின் படைப்புக்களும் இப்படித்தானிருக்குமென முடிவுகட்டி விடுகிறார்கள். சமூகத்திற்காக சேவையாற்றும் அமைப்புக்கள் இசைக்கு ஏது எல்லை நிகழ்வை யாரோ ஒருவருடைய நிகழ்வாக பார்க்கிறார்களேயொழிய இது தமிழர்களின் எழுச்சயாகி இனம் காண தவறிவிட்டார்கள். எம் இளஞ் சந்ததியினருக்கு நாம் இந்த இசைமுயற்சியை கையளிக்க தவறுவோமாயின் பெரிய வரலாற்று தவறிழைத்தவர்களாவோம் என்பதையும் உணர்கின்றேன். isakku-ethu

ekuruvi-aiya8-X3

 

Share This Post

Post Comment