பெல்ஜியத்தில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லேட் சிலைகள்

Facebook Cover V02

chock2ஐரோப்பாவின் பெல்ஜியத்தில் உள்ள டர்பை நகரில் பிரபலமான சாக்லேட் திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் 50க்கும் மேற்பட்ட சாக்லேட்டால் செய்யப்பட்ட விலங்குகளில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை பல நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் வடித்துள்ளனர்.

உலகின் மிகச்சிறிய நகரான டர்பையில் உலகின் மிகப்பெரிய சாக்லேட் திருவிழா இதுவாகும். ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

chock1இந்த விழாவில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் தத்ரூபமான சிலைகள் பார்வையாளார்களை ஆச்சரியப்பட வைத்தன. யானை, குரங்கு, முதலை, பறவைகள் மற்றும் முயலின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது வரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த விழா உலகில் உள்ள அனைத்து கலைஞர்களும் ஒன்றாக சந்திக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

Share This Post

Post Comment