ரொரன்ரோ வீட்டுச் சந்தை நிலவரங்கள்.

ekuruvi-aiya8-X3

ரொரன்ரோ வீட்டுச் சந்தை நிலவரங்கள்.

கடந்த வருடம் இதே காலப் பகுதியில் கொதிநிலையில் இருந்த வீட்டுச் சந்தை இப்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது.

கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் சாரசரி பெறுமதி 865,817.00 டொலர்களாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதே காலப்பகுதியில் விற்பனையான வீடுகளின் சாரசரி விலையில் இருந்து  8 வீதமான வீழ்ச்சி உணரப்படுகின்றது.

எனினும் இந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் விற்பனையான வீடுகளின் சாரசரி பெறுமதியுடன் ஒப்பிடுகையில் மே மாதம் 6 வீதமான  சராசரி விலை அதிகரிப்பினை காண்பித்துள்ளது.இந்த ஆண்டு ஆரம்பம் முதல் வீடுகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு மே மாதமும் தொடர்ந்துள்ளது.

ஆரசாங்கம் வட்டி வீதங்களை அதிகரித்தமை மற்றும் அடமானக் கடன் பெறுவதில் கொண்டு வரப்பட்டுள்ள இறுக்கமான நடைமுறைகள் காரணமாக வீட்டுக் கொள்வனவாளர்கள் சிரமங்களை கடுமையான எதிர் கொண்டு வருகின்றனர்.
Sign_of_the_Times-Foreclosureஇதன் விளைவாக என்னுமில்லாத வகையில் வாடகை வீடுகளுக்கான கேள்வி அதிகரித்த காணப்படுகின்றது. வீட்டு உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் வாடகைத் தொகையினை விட அதிகமான தொகையினை வழங்கி வீடுகளை வாடகைக்கு பெற்றுக் கொளளும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன. கடந்த வருடத்தை விட வீட்டு வாடகை 12 வீதமாக அதிகரித்துள்ளது 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீடுகளுக்கான வாடகை 21 வீதத்தால் அதிகரித்துள்மையும் கவனிப்பிற்குரியது.
வாடகை குடியிருப்பாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தொடர்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Statndard Form of Lease Statndard Form of Lease வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு அதிகமான வரப்பிரசாதங்களை வழங்கியிருக்கின்றது. ஏப்பிரல் மாதம் 30ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டம் வீட்டு உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ரொரன்ரோ பெரு நகரிற்கு  வருடாந்தம் 80,000 புதிய குடியிருப்பாளர்கள் வருகை தருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஏற்படும் சனத்தொகைப் பெருக்கத்தை ஈடு செய்யும் அளவிற்கு போதுமான கட்டுமானங்கள் இங்கு மேற்கொள்ளப்படாமையானது குடியிருப்பிற்கான தேவையை கேள்வி நிரம்பியதொன்றாகவே தொடர்ந்தும் வைத்திருக்கின்றது.
இவ்வாறான சூழலில் வீட்டுச் சந்தையானது சிறிதளவான தளம்பல்களை வெளிப்படுத்தினாலும் பெருமளவான சரிவினை சந்திக்காது என்றும் தொடர்ச்சியாக வீடுகளின் விலைகளும் வாடகையும் அதிகரிக்கும் போக்கினையே காண்பிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ரமணன் சந்திரசேகரமூர்த்தி

 

Share This Post

Post Comment