கொளுத்தும் வெயிலில் காரின் முன்பகுதியில் மீனை பொரித்தெடுத்த பெண்

Facebook Cover V02
frying-fish-on-carசீனாவில்   கொளுத்தும் வெயிலால்  அங்குள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நமது நாட்டில்   தெலுங்கானாவில் வெயிலில் ஆம்லெட் போடுவது மற்றும் சப்பாத்தி போடுவது எல்லாம் நடைபெற்றது அது போல் சீனாவில் ,வெயிலின் வெப்பத்தை  பயன்படுத்தி  அந்நாட்டு பெண்  கார் ஹூடில் வைத்து மீன் சமைத்த  சம்பவம் நடந்துள்ளது. இதனை டெய்லி சினா வெளியிட்டு உள்ளது
கார் முன்பக்கமான ஹூடில் பயங்கரமாக சுடுகிறது. அதை உணர்த்தும் வகையில், அந்த பெண்  மீன் சமைத்துள்ளார். 4 முதல் 5 மீன்கள் வரை கார் ஹூடு சூட்டில் அந்த பெண் சமைத்ததாக தெரிகிறது. அங்கு அடிக்கும் 40 டிகிரி வெயிலால் காரின் மேல்பகுதியில் வைக்கப்பட்ட மீன்கள் சீக்கரத்திலேயே வெந்துவிட்டன.  மீன் நன்கு வெந்து மொறுமொறுப்பாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது
சீனாவில் கொளுத்தும் வெயிலை உணர்த்தும் இந்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share This Post

Post Comment