ஹாலிபாக்ஸ் அடுக்குமாடிக் குடுயிருப்பில் தீ – மக்கள் உடனடியாக வெளியேற்றம் !!

Thermo-Care-Heating
இன்று அதிகாலை 3:30 மணியளவில் ஹாலிபாக்ஸ் லேச்வூட் டிரைவ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பாரிய தீ விபத்து நிகழ்ந்துள்ளது. மாடியின் இரண்டாம் தளத்தில் பற்றிய தீ மூன்றாம் தளம் வரையிலும் பரவி கொளுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

இதனால் இரு தளங்களிலும் கடுமையான சேதாரங்கள் ஏற்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கிருந்த மக்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். மக்களை மீட்கும் இந்த நடவடிக்கையின் போது தீயணைப்பு வீரர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது,

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை. அதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முற்றிலுமாக அணைக்கப்பட்டவுடன் குடியிருப்புவாசிகள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்image122

ideal-image

Share This Post

Post Comment