பிரோம்டோனில் பரவ ஆரம்பித்து விட்டது தட்டம்மை – குழந்தைகளை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள் !!

ekuruvi-aiya8-X3

மார்ச் 12 முதல் 17 வரையிலான 5 நாட்களில் மட்டும் பிரோம்டன் நகரில் அம்மை பரவியதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஏழைத் தாண்டியுள்ளது. இதில் குழந்தை ஒன்றும் அடங்கும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர் அனைவரும் தாங்களே முன் வந்து தட்டம்மைக்கான தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ளுமாறு பீல் மருத்துவ அதிகாரிகள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கோடையில் பலரையும் தாக்கும் தட்டம்மை அல்லது சின்னமுத்து, மணல்வாரி அம்மை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய ஓர் கொடிய கோடைக்கால நோய்.

இது பாராமைக்ரோ வைரஸ் வகையில் ஒன்றான மோர்பில்லியால் ஏற்படும் ஓர் சுவாச நோய்த்தொற்றாகும். இது குழந்தைகளை அதிகம் தாக்கும். மேலும் இந்த தட்டம்மையை சாதாரணமாக விட்டால், உயிரையே இழக்க நேரிடும்.

இங்கு தட்டம்மை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து, உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தட்டம்மை அறிகுறிகள்

தட்டம்மைக்கான முதல் அறிகுறி 104 டிகிரி F-க்கும் அதிகமான அளவில் காய்ச்சல் வருவது. பின் கண்களில் இருந்து நீர் வடிதல், பசியின்மை, வாயினுள் அரிப்புக்கள் மற்றும் சருமத்தின் மேல் சிவப்பு நிற புள்ளிகள் இருப்பது போன்றவை. இந்த அறிகுறிகளைக் கொண்டோரும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பு மருந்து போட்டுக் கொள்வது அவசியம்.

மேலும் கீழ்காணும் இடங்களுக்கு குறிப்பிட்ட திகதிகளில் நீங்கள் சென்று வந்திருந்தாலும் உங்களுக்கு தட்டம்மை பரவ வாய்ப்புக்கள் அதிகம் என்கிறது பீல் மருத்துவத்துறை,

  • March 12, Gurdwara Sikh Sangat Temple, 32 Regan Road, Brampton, 11 a.m. – 2:30 p.m.
  • March 12, Walmart Brampton South Supercentre, 15 Resolution Drive, Brampton, 2 – 6 p.m.
  • March 12, Shoppers World Brampton, 499 Main Street South, Brampton, 3 – 7 p.m.
  • March 14, Dr. Anis Fatima’s office, Shoppers World Medical Centre & Walk-In Clinic, 499 Main Street South, Brampton, 5:30 – 9 p.m.
  • March 16, Dr. Anis Fatima’s office, Shoppers World Medical Centre & Walk-In Clinic, 499 Main Street South, Brampton, 10:30 a.m. – 2 p.m.
  • March 16, William Osler Health Centre, Brampton Civic Site, Emergency Department, 2100 Bovaird Drive East, Brampton, 6:50 p.m. – midnight
  • March 17, William Osler Health Centre, Brampton Civic Site, Emergency Department, 2100 Bovaird Drive East, Brampton, midnight – 11:35 a.m

Share This Post

Post Comment