ஹட்டன் மல்லிகைப்பூ பகுதியில் பாரிய தீ விபத்து

ekuruvi-aiya8-X3

hatton_Fireஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பதுளை பிரதான ரயில் பாதையில் ஸ்ரெதன் பகுதியிலும் ஹட்டன் மல்லிகைப்பூ பகுதியிலும் புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீயில் பல ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலை மற்றும் காற்றினால் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மிகுந்த சாவாலாக அமைந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் நீர்போசணை பிரதேசமான இந்த பகுதியில் தீ ஏற்பட்டதால் எதிர்காலத்தில் பாரியளவில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ காரணமாக அரியவகை மூலிகைகள் விலங்கினங்கள் நீரூற்றுக்கள் போன்றன அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு நிறைந்த காட்டுப் பகுதியில் நிலங்களை துப்புரவு செய்வதற்காக அல்லது மிருகங்களை வேட்டையாடுவதற்காக தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share This Post

Post Comment