நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள ஹரி போட்டர் விழா!

ekuruvi-aiya8-X3

w-720x450ஹரி போட்டர் (Harry Potter ) புத்தக வெளியீடுகளின் முதற்பதிப்பான “Harry Potter and the Philosopher’s Stone” எனும் புத்தகம் வெளியிடப்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதையடுத்து நாடு முழுவதும் British Council நிறுவனம் அதனை விழாவாக கொண்டாட தீர்மானித்து உள்ளது.

இந்த விழாவானது, யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு, Orion City, ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் சிறுவர்கள், வயது வந்தவர்களுக்கான புதையல் தேடல்கள், சிறுவர்களுக்கும், வயது வந்தவர்களுக்குமான புத்தக வாசிப்பு, தொப்பிகளை வகைப்படுத்தும் நிகழ்வு, சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான கைவினை பொருட்களை தயாரிக்கும் நிகழ்வு மற்றும் வினாவிடை போட்டி ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இல. 70, றக்கா வீதியில் அமைந்துள்ள British Council நூலகத்தில் எதிர்வரும், 09ஆம், 23ஆம், 30ஆம், ஆகிய தினங்களிலும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் மற்றும் 13ஆம் திகதிகளான வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிமுதல் 5 மணிவரை நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்களை www.britishcouncil.lk/event எனும் இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment