பாரதி இந்திய சாஸ்திரிய நாட்டியக்கல்லூரி பெருமையுடன் வழங்கிய அரங்கப்பிரவேசம்

Facebook Cover V02

haraniகார்த்திகை மாதம் 5ஆம் திகதி 2016 ஆண்டு இனிமையான அந்திமாலை வேளை Scarborough Armenian Youth Center வாசலில் வரவேற்புடன் ஐங்கரத்தான் முன் அமர்ந்து அருள்புரிய குரு ஸ்ரீமதி சியாமா தயாளனின் நெறிப்படுத்தலின் பிரதிபலிப்பாயும் தனது 9 வருட பயிற்சியின் உச்சமாயும் செல்வி ஹரினி சிவசுப்பிரமணியனின் அரங்ப்பிரவேவசம் குரு ஸ்ரீமதி சியாமா தயாளனின பூஜையுடன் இனிதே ஆரம்பமானது.

ஹரினியின் தாயார் வாவேற்புரை வழங்க திரு. ராகவன் அவர்கள் அடுத்து வந்த சிலமணிநேரத்தை அழகுற தொகுத்து வழங்கினார். கணேசவந்தனத்துடன் ஆரம்பமான நிகழவு நவரச பாவங்களை தன் மாணவிக்கு மிகநேர்த்தியாக பயிற்றுவித்து அவள் மூலம் தன்னாற்றலை குரு வெளிப்படுத்தியுள்ளார். நிகழ்வுகளை இனிதே ஆரம்பம் முதல் கண்டு ரசித்து இன்புற்று வாழத்தி உரை நிகழ்த்தினார் பிரதம விருந்தினர் ஸ்ரீமதி. அனுராதா ஜெகன்நாதன் அவர்னள்.

harani-ekuruvi
இக் கட்டுரையும் , படங்களும் இகுருவி பத்திரிகையில் டிசம்பர் மாதம் 2016 அன்று வெளிவந்தவை மேலதிக படங்களை பார்வையிட இதில் அழுத்தவும் http://images.biztha.com/Toronto-2016/Harenie-Siva-Arangetram-Nov-05

குரு ஸ்ரீமதி சியாமா தயாளன் வித்தியாசமான 9 உருப்படிகளை தெரிவுசெய்து அதற்குத்தேவையான நடன கட்டமைப்பில் அழகுற நட்டுவாங்கம் செய்து தன்திறமையை வெளிப்படுத்தியது மட்டுமல்ல ஹரினியையும் மிகநேர்த்தியாக மெருகேற்றி உள்ளார். 30-35 நிமிட வர்னம் ஆகட்டும், அல்லது கண்ணன் வருகின்ற நேரம், ஓம்காரகாரினி ஆகட்டும் எதுவென்று சொல்ல முகபாவம் என்ன, அங்க அசைவு, தேடல், கோபம், ஆனந்தம் இப்படி அனைத்தையும் மிகமிக கச்சிதமாய் காணவைத்து தனது பல கால நடனப்பசிக்கு தீனிபோட்டுள்ளாள் ஹரினி. சபாஷ் ஹரினி!

அதுமட்டுமா ‘இசைக்கலைமணி சங்கீத மிருதங்க கலாவித்தகர்’ ஸ்ரீ. வர்ணராமேஸ்வரன் அவர்களும், ‘மிருதங்க கலாவித்தகர’ ஸ்ரீ. ரதிரூபன் அவர்களும், ‘கலாபிரதீபா’ ஸ்ரீ. ஜெயதேவன் அவர்களும் ஒருங்கே இணைந்து வழங்கிய பக்க இசை ஹரினிக்கு ஓர் மிகப் பெரிய வரப்பிரசாதமாய் அமைந்தது.

மண்டபம் நிறைந்த கலைஜாம்பவான்கள், உறவுகள், நண்பர்கள், பள்ளித்தோழிகள், நடனக்கல்லூரி மாணவச்செல்வங்கள் இனிதே வாழ்த்துக்கூற மிகவும் உற்சாகமாய் நிறைவு பெற்றது. குரு ஸ்ரீமதி. சியாமா தயாளன் அவர்களுக்கும் ஹரினி உங்களுக்கும் எல்லோர்சார்பிலும் எமது நல்வாழ்த்துக்கள்.

இக் கட்டுரையும் , படங்களும் இகுருவி பத்திரிகையில் டிசம்பர் மாதம் 2016 அன்று வெளிவந்தவை மேலதிக படங்களை பார்வையிட இதில் அழுத்தவும்  http://images.biztha.com/Toronto-2016/Harenie-Siva-Arangetram-Nov-05
இக் கட்டுரையும் , படங்களும் இகுருவி பத்திரிகையில் டிசம்பர் மாதம் 2016 அன்று வெளிவந்தவை மேலதிக படங்களை பார்வையிட இதில் அழுத்தவும்
http://images.biztha.com/Toronto-2016/Harenie-Siva-Arangetram-Nov-05

DSC00392-X2
http://images.biztha.com/Toronto-2016/Harenie-Siva-Arangetram-Nov-05

DSC01618-X2
http://images.biztha.com/Toronto-2016/Harenie-Siva-Arangetram-Nov-05

DSC01720-X2
http://images.biztha.com/Toronto-2016/Harenie-Siva-Arangetram-Nov-05

DSC02144-X3
http://images.biztha.com/Toronto-2016/Harenie-Siva-Arangetram-Nov-05

DSC02170-X3
http://images.biztha.com/Toronto-2016/Harenie-Siva-Arangetram-Nov-05

Share This Post

Post Comment