எச் – 1பி விசா வைத்திருப்போர் நாட்டில் தங்கியிருக்கலாம் – அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவிப்பு

ekuruvi-aiya8-X3

america‘எச் – 1பி விசா வைத்திருப்போரை, நாட்டை விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கும் திட்டம் இல்லை’ என, அமெரிக்க அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை எனக் கூறி, அதை அமல்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமெரிக்காவில் பணியாற்ற, திறமையான வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், ‘எச் – 1பி’ விசாக்களை நிறுத்தப் போவதாகவும், அமெரிக்க குடியுரிமை அளிக்கும், ‘கிரீன் கார்டு’க்காக காத்திருப்போர், அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர் என்றும், தகவல்கள் வெளியாகின.

இதனால், அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் எழுந்ததால், இந்தியர்கள் மத்தியில் பீதி காணப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், அமெரிக்க அரசு மூத்த அதிகாரிகள், நேற்று கூறும் போது;

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை நிறுவனம், ‘எச் – 1பி’ விசா வைத்திருப்போரை, அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் வகையில், விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கவில்லை. இந்த விசா தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டாலும், அமெரிக்காவில் பணிபுரிவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இருக்காது.

தங்களிடம் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் பணிக்காலத்தை, ஓராண்டு நீட்டிக்கும் வகையில், நிறுவனங்கள், அரசுக்கு கோரிக்கை விடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment