ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூடு – 6 பொதுமக்கள் பலி

ekuruvi-aiya8-X3
Afghanistan17ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு கோர் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாகனத்தில் சென்ற  6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் இக்பால் நெஷாமி கூறுகையில்,
”மேற்கு கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபரோஷ் கோஹ் அருகே வாகனத்தில் சென்ற 6 பொதுமக்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.  பாதிக்கப்பட்ட அனைவரும் அங்குள்ள ஹசாரா என்ற சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஷியா பிரிவினர் ஆவார்கள். இத்தாக்குதல் சம்பவம் குறித்து எந்த வித அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை” எனக் கூறினார்.
முன்னதாக கோர் மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment