எட்டு நிறங்களில் அட்டகாசமாய் வெளியாகும் கேலக்ஸி நோட் 8

ekuruvi-aiya8-X3

samsunggalaxynote8சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆகஸ்டு 23-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் கேலக்ஸி நோட் 8 எட்டு வித நிறங்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

சீனாவின் வெய்போ தளத்தில் வெளியாகியுள்ள புதிய லைவ் புகைப்படங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 மிட்நைட் பிளாக், ஆர்க்டிக் சில்வர், ஆர்ச்சிட் கிரே/ வைலட், கோரல் புளூ, டார்க் புளூ, டீப் சீ புளூ, பின்க் மற்றும் கோல்டு நிறங்களை கொண்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறமும் பதிவிடப்பட்டுள்ளது, இதில் நோட் 8 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்பக்க பேனல் பிளாக் நிறத்திலும் எஸ் பென் அதற்குரிய நிறத்தில் வழங்கப்படுகிறது.

Samsung-Galaxy-Note-8

இத்துடன் சாம்சங் ஸ்மார்ட்போனின் வால்பேப்பர்களும் வெய்போ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனுடன் இலவச டிரான்ஸ்பேரன்ட் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. எனினும் இந்த கேஸ் சில வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படும் என்றும் இதன் விலை KRW 20,000 முதல் KRW 30,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,100 முதல் ரூ.1,600 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஐரோப்பா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இந்த கேஸ் இலவசமாக வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

note-8-wallpaper._சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் புதிய லைவ் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் மற்றும் புதிய எஸ் பென் அனைத்து கோணங்களிலும் காட்சியளிக்கிறது. இதில் டூயல் கேமரா செட்டப், கிளாஸ் பேக், பெசல் லெஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட டச் சென்சிட்டிவிட்டி வழங்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 8 அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD 1440×2960 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 8895 சிப்செட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 12 எம்பி டூயல் கேமரா அமைப்பு, வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.7 அப்ரேச்சர் மற்றும் இரண்டாவது கேமராவில் f/2.4 அப்ரேச்சர் மற்றும் 2X ஆப்டிக்கல் சூம் வழங்கப்படுகிறது.

_note-8-leaks._L_styvpfஇரண்டு லென்ஸ்களிலும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மெமரியை பொருத்த வரை 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் EUR1,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.75,400 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் செப்டம்பர் மாதம் முதல் இதன் விநியோகம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

 

 

Share This Post

Post Comment