ஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலி 40 பொருட்களின் விலை குறையும்

ekuruvi-aiya8-X3

GST-taxஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் நிதி மந்திரிகள் விடுத்த கோரிக்கையை எடுத்து 40 பொருட்களின் வரிவிதிப்பு விகிதாசாரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த 40 பொருட்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.

1. அக்ரூட் பருப்பு (இதன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு) 2. உலர்ந்த புளி (இதன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு) 3. பொட்டுக்கடலை (இதன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு)

4. கூழ் பவுடர் (இதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகிறது). 5. இட்லி, தோசை மாவு (இதன்வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகிறது). 6. கால்நடை தீவனமற்ற பிற வகை பயன்பாட்டு புண்ணாக்கு (5 சதவீதம் வரி புதிதாக விதிப்பு), 7. பருத்தி புண்ணாக்கு (5 சதவீத வரி விதிப்பு விலக்கப்படுகிறது.) 8. அகர்பத்தி, சாம்பிராணி (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு), 9. மருத்துவ பயன்பாடு கையுறைகள் (28 சதவீத வரி 18 சதவீதமாக குறைகிறது). 10. பிளாஸ்டிக் மழை கோட்டுகள் ( 28 சதவீத வரி 18 சதவீதமாக குறைப்பு)

1. ரப்பர் பேண்ட் ( 28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைப்பு) 12. நெல் அரவை எந்திரத்துக்கான ரப்பர் ரோல்கள் (28 சதவீத வரி விதிப்பு 18 சதவீதமாக குறைப்பு). 13. கடன் பத்திரம் (12 சதவீத வரி 5 சதவீதம் ஆகிறது.). 14. கதர் துணிவகைகள் ( 5 சதவீத வரி விதிப்பு ரத்து). 15. கார்ட்ராய் வகை துணிகள் (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு). 16. சேலை பால்ஸ் (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு), 17. தொப்பிகள் (18 சதவீத வரி 12 சதவீதமாக குறைப்பு). 18. களிமண் சிலைகள் (28 சதவீத வரி விதிப்பு ரத்து). 19. மரம், கல், உலோக சிலைகள் (28 சதவீத வரி 12 சதவீதமாக குறைப்பு). 20. கச்சா வைரம் (3 சதவீத வரி விதிப்பு கால் சதவீதமாக குறைப்பு).

21. சொட்டு நீர்ப்பாசன உபகரணங்கள் (18 சதவீத வரி விதிப்பு 12 சதவீதம் ஆகிறது). 22. கைத்தறி நெசவு அம்பர் சர்க்கா (வரிவிதிப்பில் இருந்து விலக்கு) 23. 20 அங்குலம் வரையிலான கம்ப்யூட்டர் மானிட்டர் (28 சதவீத வரி, 18 சதவீதமாக குறைப்பு). 24. பருத்தி மெத்தை உறை ( விலை ரூ.1000–க்குள் 5 சதவீதம், ரூ.1000–க்கு அதிகமானவற்றுக்கு 12 சதவீத வரி விதிப்பு. பழைய வரி 18 சதவீதம்) 25. பவளப்பாறை (28 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு), 26. துடைப்பம், தூரிகை ( 5 சதவீத வரிவிதிப்பு ரத்து) 27.சமையலறை கியாஸ் லைட்டர் (28 சதவீத வரி, 18 சதவீதமாகிறது). 28. ஜெபமாலை, பிரார்த்தனை மணிகள் (18 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு). 29. ஹவான் சமாக்ரி (5 சதவீத வரி விதிப்பு). 30. மரத்தாலான மேஜை, சமையலறை சாதனங்கள் (18 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு).

31. கால்மிதி பாய், பை, பணப்பை (12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைப்பு). 32. காகித பொருட்கள் (18 சதவீத வரி 5 சதவீதமாக குறைப்பு), 33. கல் பதித்த பொருள் (28 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு). 34. கிண்ணங்கள், சிலுவைகள், பேப்பர் வெயிட்டுகள் (28 சதவீத வரி விதிப்பு 12 சதவீதமாக குறைப்பு). 35. செராமிக் பானைகள், குடுவைகள் (28 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு). 36. சமையலறை கோப்பை, கழிவறை கோப்பை பீங்கான் (18 சதவீத வரி, 12 சதவீதமாக குறைப்பு). 37. பீங்கான் தவிர்த்த சமையலறை சாதனங்கள் (28 சதவீத வரி 12 சதவீதமாக குறைப்பு). 38. அலங்கார பொருட்கள் (28 சதவீத வரி விதிப்பு 12 சதவீதமாக குறைப்பு). 39. மணி (18 சதவீத வரி விதிப்பு, 12 சதவீதமாக குறைப்பு) 40. யானை தந்தம், எலும்பு உள்ளிட்டவற்றில் செய்கிற பொருட்கள் (28 சதவீத வரி விதிப்பு, 12 சதவீதமாக குறைப்பு).

நடுத்தர கார்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு 2 சதவீதம், பெரிய ரக கார்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு 5 சதவீதம், எஸ்.யு.வி. கார்கள் மீதான கார்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு 7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

இதனால் நடுத்தர ரக கார்கள் மீதான வரி விதிப்பு 45 சதவீதம், பெரிய ரக கார்கள் மீதான வரி விதிப்பு 48 சதவீதம், எஸ்.யு.வி. கார்கள் மீதான வரி விதிப்பு 50 சதவீதம் ஆகிறது.

இந்த வரி விதிப்பு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருகிறது.

Share This Post

Post Comment