தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது

finalthemo

ia_19சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜி.எஸ்.டி) நாடு முழுவதும் வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக சட்டப்பேரவையில் இது தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. மசோதாவை தற்போது நிறைவேற்றாமல் சட்டமன்றத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், ஜிஎஸ்டி தொடர்பான திமுகவின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”ஜி.எஸ்.டி தொடர்பாக மத்திய அரசு, வணிகர்களிடம் ஆலோசனை நடத்தவில்லை. ஜிஎஸ்டி வரியை அனைவரும் புரிந்துகொள்ள இந்த ஆண்டை பயிற்சி ஆண்டாக அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

அதேபோல், ஜிஎஸ்டி வரியால் தமிழக அரசுக்கு ரூ.4400 கோடி வருவாய் கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Share This Post

Post Comment