கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம்: ஆக்ஸிஜன் சப்ளையர் கைது

korak_19உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த  ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததுதான் காரணம் என கூறப்பட்டது. அரசு தரப்பில் மறுக்கப்பட்டு மூளை அழற்சி காரணம் என கூறுப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் போதிய ஆக்சிஜன் கையிருப்பு இல்லாதது தான் காரணம் என தெரியவந்தது. பாபா ராகவ்தாஸ் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யும் பொறுப்பு புஷ்பா ஏஜென்சி நிறுவனிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அனுப்பிய ஆக்சிஜனுக்கு உரிய முறையில் பணம் தர மருத்துவமனை நிர்வாகம் லஞ்சம் கேட்டதால் சிலிண்டர்களை தொடர்ந்து அனுப்ப அந்த நிறுவனம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் அடைந்தது தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த புஷ்பா ஏஜென்சி உரிமையாளர் மணிஷ் பண்டாரி என்பரை டெயோரியா பகுதியில் போலீசார் கைது செய்தனர்.
கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய விசாரணை குழு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

 • சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு
 • கஜா புயல் தனியார் நிறுவன பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் -தமிழக அரசு
 • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
 • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
 • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
 • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *