வருவாய் உபரியாக உள்ளதால் குடிமக்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்கும் சிங்கப்பூர் அரசு

ekuruvi-aiya8-X3

singapore-20சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நிதிமந்திரி ஹெங் ஸ்வீ கீட் சமீபத்தில் நிதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், அரசுக்கு சுமார் 7.6 அமெரிக்க மில்லியன் டாலர் ரூபாய் வருவாய் உபரியாக உள்ளதாக தெரிவித்தார். (உபரி பட்ஜெட் என்பது செலவுகளை விட வருவாய் அதிகம் இருக்கும் பட்ஜெட்) இதனால், சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

21 வயது நிரம்பிய குடிமகன் இந்த போனஸை பெற தகுதியானவர் ஆவார். குடிமக்களின் வருவாய்க்கு ஏற்ப இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதற்காக, 533 அமெரிக்க மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

சுமார் 27 லட்சம் குடிமக்கள் இதனால் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment