3 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA

Facebook Cover V02

gmoa-23மீண்டும் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதியை முடிவு செய்வதற்காக நேற்று (23) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடியதாக சந்தர்பத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment