7 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்து புதிய கின்னஸ் சாதனை

book_readingமகாராஷ்டிரா மாநிலத்தின் கட்ச்ரோலி மாவட்டத்தில் புணேவை சேர்ந்த ஆதர்ஷ மித்ரா மண்டல் அமைப்பு சார்பில் இன்று புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்காக ஒரே இடத்தில் 7 ஆயிரம் பேர் ஒன்றுகூடினர். இந்த நிகழ்ச்சியில் காந்திய சிந்தனைகள் மற்றும் அமைதி என்ற மராத்தி மொழி புத்தகத்தை அனைவரும் வாசித்தனர். இந்த புத்தக வாசிப்பை புதிய உலக சாதனையாக கின்னஸ் சாதனை புத்தகம் பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே, துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் 18-ம் தேதி 5 ஆயிரத்து 754 பேர் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்ததே சாதனையாக இருந்தது.
கட்சிரோலி மாவட்டம் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment