ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் செயற்திறனுடன் பணியாற்றுவது அவசியம் – பிரான்ஸ் ஜனாதிபதி

ஐரோப்பாவின் பாதுகாப்பு விடயத்தில் ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் செயற்திறனுடன் பணியாற்றுவது அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஒன்பது ஐரோப்பிய நாடுகளில் இருந்து பாதுகாப்பு அமைச்சர்கள் பாரிஸில் முதல் தடவையாக இன்று (புதன்கிழமை) சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதால் ஐரோப்பாவின் பாதுகாப்பு விடயத்தில் இனிவரும் காலத்தில் ஐரோப்பிய துருப்புக்கள் செயற்திறனுடன் செயற்படுவது அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதானது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நாட்டின் நலன் கருதி பாதுகாப்பை ஸ்திரப்படுத்த ஏனைய நாடுகளில் தங்கி இருக்காமல் ஒன்றியத்தின் பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.






Related News

  • அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை – பிரான்ஸ் கண்டனம்
  • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
  • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *