டொராண்டோவில் Fort McMurray காட்டு தீ நிவாரண நிதி சேர் நடைபவனி!

ekuruvi-aiya8-X3

கனடா Fort McMurrayயில் ஏற்பட்ட காட்டு தீயினாலான கடுமையான பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த 80,000 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களிற்கு உதவுமாறு கனடிய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க கனடா செஞ்சிலுவை சங்கத்தினூடாக நிவாரண உதவிகளை வழங்கு முகமாக கனடியத் தமிழர் முன்னெடுக்கும் “நிதி சேர் நடைபவனி” நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 8, 2016 அன்று மார்க்கம் & steel; ஸ்டீல் சந்திப்பிற்கருகில் உள்ள பூங்காவின் முன்பிருந்து மாலை 3:00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து மக்களும் பெரும் எண்ணிக்கையினராக கலந்து இப்பணிக்கு வலுச்சேர்த்து ஆதரவு நல்குமாறு வேண்டுகின்றோம்.

தமிழர்களின் இனச்சிக்கலுக்கு குரல் கொடுக்கும் கனடிய மக்களின் துயர் துடைக்க தமிழ் கனடியர்களாக இப்பணியை நாம் ஆற்ற வேண்டியது எம் காலக் கடன் என்பதை உணர்ந்து அனைவரும் அணி திரள்வீர்! ஆதரவு நல்குவீர்!

மேலதிக விபரங்களுக்கு: (416) 830 – 7703kaar

a-truck-drives-toward-a-wildfire-in-fort-mcmurray-alta-onhgefhgfdh

 

Share This Post

Post Comment