டக் போர்ட்டைக் காணவில்லை ரதன்

டக் போர்ட் ஒன்ராரியோவின் முதல்வராக யூன் 29, 2018ல் சுப வேளையில் பதவியேற்றார். அதன் பின்னர் தனது அமைச்சரவை பட்டியலையும் வெளியிட்டார். பல தமிழர்களின் எதிர்பார்ப்பில் மண்ணையள்ளித் தூவி விட்டார் போர்ட். ஒரு தமிழருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. ஒரு சிறுபான்மையினத்தவரும் இல்லை. விதிவிலக்காக றேமண்ட் சோ முதியோருக்கான அமைச்சராக பதவியேற்றார். கொன்சவேற்றிவ் கட்சி, சிறுபான்மையினத்தவருக்கு எதிரான கட்சி என்பதனை மீண்டும் ஒரு தடவை அவர்கள் நிறுவத் தயங்கவில்லை. உதவி அமைச்சர்கள் பட்டியலில் பல சிறுபான்மையினத்தவர் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால் அங்கும் தமிழருக்கு இடம் கிடைக்கவில்லை. கொன்சவேற்றிவ் கட்சியினை ஒரு புத்திஜீவி(?) பிரமுகர் கூட்டமே இயக்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களின் முடிவுகளை டக் போர்ட் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். அகக் காரணிகளை இவர்கள் தீர்மானிக்கலாம். புறக் காரணிகளை இவர்களால் தீர்மானிக்க முடியாது.

Ford-vs-Trudeau
டக் போர்ட் பதவியேற்ற ஒரு சில தினங்களில் கனடா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் சுமார் 245 பொருட்களுக்கு அதிக சுங்க வரியை நிர்ணயித்துள்ளது. அதற்கு முன்பாக டொனால்ட் ரம்ப் அலுமீனியம், இரும்பு போன்ற பொருட்களுக்கு அதிக சுங்க வரியை விதித்தார். இது நேரடியாகவே கனடாவைப் பாதித்தது. குறிப்பாக கனடாவின் மூன்று தொழில் நகரங்கள் இதன் நேரடிப் பாதிப்புக்குள்ளாகியது. ளுயரடவ ளுவந. ஆயசநைஇ ழுவெ.இ ர்யஅடைவழnஇ ழுவெ.இளுழசநட-வுசயஉலஇ ஞரந.இ ஆகிய நகரங்களே அவையாகும். இவற்றுள் இரு நகரங்கள் ஒன்ராரியோ நகரங்கள். பொருளியல் வல்லுனர்கள் புதிய சுங்க வரியின் விளைவினால் கனடாவில் தயாரிக்கப்படும் கார்களின் எண்ணிக்கை சுமார் ஒன்பது லட்சத்தால் குறையும் என கருதுகின்றனர். கனடாவில் தற்சமயம் வருடத்துக்கு 2மில்லியன் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. குறையும் தொகை 45வீதமாகும். ஓன்ராரியோவிலேயே பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. கேம்பிரிட்ஜ், ஒசாவா, வின்சர், ஓக்வில் போன்ற நகரங்களில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. அண்மைக் காலங்களில் இங்குள்ள நிறுவனங்கள் பல மில்லியன்களை அதிகமாக முதலிட்டுள்ளது. உதாரணமாக 2013 போர்ட் ஓக்வில் தொழிற்சாலையில் 700 மில்லியன் டொலர்களை அதிகமாக முதலிட்டது. ரொயாட்டா இவ் வருடம் 1.4 பில்லியனை கேம்பிரிட்ஜ் மற்றும் வூட்ஸ்ரொக் தொழிற்சாலைகளில் முதலிட்டுள்ளது. கனடாவிலேயே ராவ்4, மற்றும் கிறைஸ்லர் மினி வான்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. இத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் பலர் வேலையை இழக்க வேண்டிவரும்.
ஒன்ராரியோவின் லெமிங்ரன் நகரில் உற்பத்தியாகும் தக்காளியிலிருந்து பிரபல ஹெயின்ஸ் (ர்நiணெ) கெட்சப் தயாரிக்கப்பட்டது. நப்ராவின் விளைவு ஹெயின்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புக்கான தக்காளியை பிறிமொன்ற், ஒகாயாவில் பெற்று அங்கேயே உற்பத்தி செய்யத் தொடங்கியது. பெரும் இழப்பைச் சந்தித்த லெமிங்ரன் விவசாயிகளை பிரென்ச் என்ற மற்றொரு கெட்ச்அப் நிறுவனம் காப்பாற்றியது. இந் நிறுவனத்துக்கும் அமெரிக்க தொடர்புண்டு. ஆனால் ஹெயின்ஸ்ன் வெளியேற்றம் நப்ராவின் விளைவு.
ஓன்ராரியோ மிச்சிக்கனுக்கு சுமார் 60 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. கலிபோர்னியா, நியு யோர்க், ஒஹாயோ போன்ற மாநிலங்களுக்கும் அதிகளவு ஏற்றுமதியைச் செய்கின்றது. அடுத்த ஒரு வருடத்துக்குள் இதில் வீழ்ச்சியைக் காணலாம்.
ஓன்ராரியோவின் ஏற்றுமதியில் 25வீதம் கார்களாகும். கார் உதிரிப் பாகங்கள் 5 வீதம், ஒன்ராரியோ 82 வீதமான பொருட்களை அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்கின்றது. அதிகளவு இறக்குமதியும் அமெரிக்காவிலிருந்தே பெறப்படுகின்றது. 55 வீதமாகும். அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் நேரடியாகவே ஒன்ராரியோவை பாதிக்கும். இது அடுத்து வரும் வருடங்களில் ஒன்ராரியோ மிக மோசமான பொருளாதார மந்த நிலையை அடைய வேண்டிவரும். ஓன்ராரியோவில் வேலையற்றோர் வீதம் அதிகரிக்கும். இது பல நிலைகளில் பொருளாதாரத்தை பாதிக்கும்.
புதிய முதல்வர் டக் போர்ட் மேற் கூறப்பட்ட புறக் காரணிகளையும் களைய வேண்டும். கட்சப், கார் மாத்திரமல்ல. இரும்பு உட்பட்ட பல பொருட்களின் தயாரிப்பு மிக, மிகக் குறையும். ஒரு புறம் நப்ரா, மறுபுறம் நப்ராவை மீறிய சுங்க வரிகள். ஆதனை ஏய்க்கும் டக் போர்ட். இவற்றின் நகர்வை டக் போர்ட் எவ்வாறு சமாளிக்கப் போகின்றார் என்பதில் தங்கியுள்ளது இவரது எதிர்காலம். இவர் சார்ந்த கொன்சவேற்றிவ் கட்சியே நப்ராவை அதாவது வட-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.
முன்னால் கனடிய பிரதமர்கள் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை கண்டித்துள்ளார்கள். சேர். ஜோன் மக்டொனால்ட் ‘கனடாவிற்கான மறைமுகமான துரோகம்’ என குறிப்பிட்டுள்ளார். ஜஸ்ரின் ரூடேயின் தந்தை பியரி எலியட் ரூடோ ‘கனடாவிற்கு செய்யப்படும் பயங்கர வஞ்சனை. கனடாவின் இறையான்மையை, அமெரிக்காவிற்கு பொருளதாரத்தின் பெயரிலும், கனடிய வளங்களின் பெயரிலும் தாரைவார்ப்பதாகும்’ என்றார். ஜோன் ரேர்னர் ‘கனடாவை விற்கும் சட்டம்’ என்றார்
நப்ரா சுதந்திர வர்த்தக வலய அமைப்பல்ல. இது வட அமெரிக்க கண்ட பொருளாதார ஒருங்கிணைப்பு அல்லது தொகையீடு. ஒருங்கிணைப்பு என்பது கனடாவைப் பொறுத்த வரை கனடாவை இழத்தலாகும் (ஐவெநபசயவழைn அநயளெ யளளiஅடையவழைn யனெ வாயவ கழச ஊயயெனய அநயளெ வாந நனெ ழக ழரச உழரவெசல) தற்போதைய ரம்பின், கனடா மீதான கட்டுப்பாடுகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.
கனடிய பாற் பொருட்கள் பண்ணைகள் ‘வழங்கல் மேலாண்மை’ முறையை பின்பற்றுகின்றன. வழங்கல் மேலாண்மை முறை என்பது (ளுரிpடல ஆயயெபநஅநவெ) தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் முறை. இது 1970களில் நடைமுறைக்கு வந்தது. 1950-1960 களில் அளவுக்கதிகமான பாற் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொரு வருடமும் சி.டி.சி ( ஊயயெனயைn னுயசைல ஊழஅஅளைளழைn (ஊனுஊ))இதன் அளவுகோளைத் தீர்மானிக்கும். இதனால் அளவுக்கு அதிகமான இறக்குமதியும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இறக்குமதிக்கான ‘ஒதுக்கீட்டு’ எல்லையைத் தாண்டி எப் பொருளும் இறக்குமதி செய்ய முடியாது. ஒவ்வொரு கனடிய பண்ணைக்கும் இவ்வாறான ஒதுக்கீடு உள்ளது. இது ‘நியாயமான விலை’, ‘அதிக உற்பத்தி தவிர்ப்பு’, ‘இறக்குமதிக் கட்டுப்பாடு’ ஆகிய மூன்று விடயங்களை உள்ளடக்குகின்றது. கொக்கோ கோலா போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் கனடிய பாற்சந்தையில் களமிறங்க, இங்கேயே உற்பத்தியை மேற்கொள்ளவுள்ளன. பீற்றபறோவில் உள்ள மினிற்மெய்ட் உற்பத்திச்சாலையை விரிவாக்கி, அங்கு இனிப்புக் குறைந்த பாலை, கொக்கோ கோலா உற்பத்தி செய்யவுள்ளது( டயஉவழளந-கசநந அடைம வாயவ ளை சiஉh in pசழவநin யனெ டழறநச in ளரபயச வாயn வசயனவைழையெட அடைம.) நப்ராவினால் மெக்சிக்கோ பெரும்பாலான மெக்சிக்கோ பண்ணைகள் மூடப்பட்டுள்ளன.
டக் போர்ட்டின் கொள்கைகள,; வழங்கல் மேலாண்மை முறையை முடக்காமல், அதே சமயம் டொனால்ட் ரம்ப்பினால் மேற்கொள்ளப்படும் வணிக யுத்தத்தை வெற்றிக் கொள்ளக் கூடிய கொள்கைகளையும் முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். யூன் 7 தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாத காலமாகின்றது. இது வரை ரம்பின் சுங்க வரி அதிகரிப்பை எவ்வாறு எதிர் கொள்ளப்போகின்றார் என மக்களுக்குத் தெரியாது. சேவைக் குறைப்பு மாத்திரம் பொருளாதாரத்தை வளப்படுத்தாது. அதற்கான தெளிவான சிந்தனையும் திட்டமும் தேவை. அது டக் போர்ட்டிடம் இருப்பதாக தெரியிவில்லை. ஒன்ராரியோ மிக மோசமான பொருளாதார பின்னடைவை நோக்கி நகர ஆரம்பமாகிவிட்டது. அடுத்த வருட முற்பகுதியில் கனடிய டொலர் 65 அமெரிக்க சதங்களாகவிருக்கும்.. அதிரடிகள் பொருளாதார அதிர்வை ஏற்படுத்தாது.4228-e 170425142417-us-canada-trade-dispute-780x439 On-US-EXPORTS On-US-IMBALANCEv2 On-US-IMPORTS (2)


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *