மனித உருவில் இணையத்தில் வைரலாகி வரும் போலி பன்றி குழந்தை

ekuruvi-aiya8-X3

man-bikeweb0308கடந்த சில நாட்களாகவே இணையத்தில் புகைப்படம் ஒன்று உலகளவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், யாரோ ஒரு மனிதன் பன்றியுடன் உறவு வைத்துக்கொண்டதால் தான் இந்த வினை நடந்துள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றன.ஒரு சில நெட்டிசன்கள் என்ன என்பதே தெரியாமல் புகைப்படத்தை மட்டும் இணையதளத்தில் பதிவிட்டு இது உண்மையா? பொய்யா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து இணையத்தில் ஒரு நபர், கென்யாவின்முரங்கா பகுதியில் தான் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது என பதிவிட்டுள்ளார். மற்றும் சிலர் இது இந்தியாவில் நிகழ்ந்துள்ளது என கருத்து தெரிவிக்க நெட்டிசன்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் புகைப்படத்திற்காக விளக்கத்தினை இத்தாலியை சேர்ந்த கலைஞர் லைர மகனுக்கோ கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு பின்னால் இருக்கும் எதுவுமே உண்மை இல்லை. இது ரப்பர் மற்றும் சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட மாடல் பொம்மை. இது எடஸி ஸ்டோரி -ல் தற்போது விலைக்கு வந்துள்ளது எனக் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

லைர மகனுக்கோ சிலிகானை கொண்டு தத்ரூப உருவங்களை உருவாக்கும் கலைஞர் ஆவார்.

Share This Post

Post Comment