பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் தவறான தகவல்கள் அழிக்கப்படும் – மார்க் ஜூக்கர்பெர்க்

Mark-Zuckerbergபேஸ்புக் தளத்தில் உள்ள தவறான செய்திகள், தனி மனிதரை தாக்கி பகிரப்படும் தகவல்கள் ஆகியவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பேஸ்புக் மார்க் ஜக்கர்பெர்க் கூறியதாவது:-

” சமூக வளைதளங்கள் வன்முறையை தூண்டும் விதமாக மாறி வருகிறது. மியான்மர், இந்தியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் பகிரப்படும் தகவல்களால் வன்முறைகள் வெடிக்கின்றன. பேஸ்புக் தளத்தில் பரப்பப்படும் புரளிகளால் சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்”

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ் அப்களில் பகிரப்படும் தவறான தகவல்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. வாட்ஸ் அப்பில் பரவிய தவறான தகவல்களால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சரியான ஒரு தீர்வு வேண்டும்.

இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் மக்கள் பேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 2019ம் ஆண்டு நடக்க இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பேஸ்புக் தளத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .

வரும் காலங்களில் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி நடக்க இருக்கும் தவறுகளை குறைக்கவும், அவற்றை தவிர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனி நடக்க இருக்கும் அனைத்து தேர்தல்களிலும் பேஸ்புக் தளம் தீவிரமாக கண்காணிக்கப்படும். தனி மனிதரை விமர்சித்து பதிவிடப்படும் பகிர்வுகள் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துகிறது.

உலக அளவில் இரண்டு பில்லியன் மக்கள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் சில நன்மைகளை அடைந்துள்ளனர். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தீமை ஏற்படுவதை தவிர்ப்பது எங்களின் தலையாய கடமை என்று கூறினார்.


Related News

 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
 • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *