தமிழர் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வை வழங்க வேண்டும்!யாழ் மே தின ஊர்வலத்தில் ஸ்ராலின்

Facebook Cover V02

இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வினை வழங்க வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மே தினத்தில் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட மேதின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கல்விக்கு 6 வீதம் கட்டாயமாக ஒதுக்க வேண்டும். கல்வித்துறையில் களவாக அரசியல் நியமனங்கள் வழங்குகின்றார்கள். அந்த நியமனங்களை உடன் நிறுத்த வேண்டும். அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தினை நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது அதனை நிறுத்த வேண்டும்.

விசேடமாக இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய தீர்வினை வழங்க வேண்டுமென்று மே தினத்தில் வலியுறுத்துகின்றோம்.

மாகாண அரசு உட்பட அனைவரும் ஊழியர்களின் உரிமைகளை முடக்குவதற்கான செயற்பாடுகளில் அதிகம் இறங்கியுள்ளார்கள். ஊழியர்களின் உரிமை மீறல்களை முடக்குவதற்கான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். கல்வியில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் நடைபெறுகின்றன. அவற்றினை உடன் நிறுத்த வேண்டும், என்றார்.

Mayday pro1 Mayday pro2114 Mayday pro2151 Mayday pro2155 Mayday pro2551 Mayday pro14144 Mayday pro21514 Mayday pro21551 Mayday pro24411 Mayday pro244151

Share This Post

Post Comment