உக்ரேய்ன் நாட்டிற்கான இராணுவ உதவி 2019 வரை நீடிப்பு

ekuruvi-aiya8-X3

கனடாவினால் உக்ரேய்ன் நாட்டுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிகளை 2019 மார்ச் மாத இறுதி வரை நீடித்துள்ளதாகப் பாதுகாப்பமைச்சர்  ஹர்ஜித் சஜான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

உக்ரேனியப் படையினருக்குப் பயிற்சிகள் வழங்குவதே இந்த உதவித் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கனேடியப் படையினர் , உக்ரேய்ன் இராணுவத்தினரின் வழங்கற் பொறிமுறைகளை நவீனமயப்படுத்துவதற்கு உதவி புரிவார்கள் எனவும் கனேடியப் பாதுகாப்பமைச்சர் தெரிவித்துள்ளார்

Share This Post

Post Comment