ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை ஆரம்பிக்கிறது சிறிலங்கா

Facebook Cover V02

Iran-oilஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானில் நேற்று ஈரானிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் பிஜாம் நம்டார் சன்ஜெனேயுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரானும் சிறிலங்காவும், நெருக்கமான பழைய நண்பர்கள் என்றும், எண்ணெய் துறையில் இருநாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளவிருப்பதாகவும் சிறிலங்கா அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டது சிறிலங்கா மக்களுக்கு நல்ல செய்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் அமைதி அணுசக்தி திட்டத்துக்கு இணங்கியதை அடுத்து, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதித் தடை கடந்த 14 ஆம் நாள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment