உரிமையை கோரினால் நாம் பயங்­க­ர­வா­திகள்

ekuruvi-aiya8-X3

wikneஅர­சாங்­கத்தின் நிலைப்­பாடு இதுவே; எழுக தமிழ்  நிகழ்வில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் விசனம்

தமிழ் மக்­களின் உரி­மை­களை கோரு­ப­வர்கள் ஆட்சி யாளர்­களின் பார்­வையில் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவே தென்ப­டு­கின்­றனர். எமது உரி­மை­களை நாம் கோரு­வது குற்­ற­மல்ல என்­பதை சிங்­களச் சகோ­த­ரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எங்கள் அர­சியல் கோரிக்­கைகள் நியா­ய­மா­னவை. நாங்கள் பிரி­வி­னையை கோர­வில்லை.

சமஷ்­டியை கோரு­கின்றோம். கனடா, பெல்­ஜியம், சுவிட்  ஸர்­லாந்து போன்று நாட்டை ஒரு­மைப்­ப­டுத்தி தன்­மா­னத்­து­டனும் ஐக்­கி­யத்­து­டனும் வாழவே விரும்­பு­கின்றோம் என்று வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

இந்த நாட்டில் தமிழ் மொழியை பேசு­கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் சகோ­த­ரர்கள் ஒன்­றாக இணைந்து அர­சாங்கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுப்­ப­தற்கும் எமது அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கும் அவற்றைப் பாது­காப்­ப­தற்கும் தொடர்ந்தும் முயற்­சிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்­க­ளுக்கு  சமஷ்­டியை உள்­ள­டக்­கிய அர­சியல் தீர்வை பெறு­வ­தற்கே நாம் உறுதியுடன் செயற்­பட வேண்டும் என்றும்  அவர் வழி­யு­றுத்­தினார்.

தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் மட்­டக்­க­ளப்பில் நேற்று எழுக தமிழ் எழுச்சிப் பேர­ணியும் நிகழ்வும் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே வட மாகாண முத­ல­மைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது, எழுமின், விழிமின், இலட்­சி­யத்தை அடையும் வரை நிறுத்­தா­தீர்கள்! என்றார் சுவாமி விவே­கா­நந்தர். கடோ­ப­நி­ஷ­தத்தில் வரும் சொற்­களை உல­க­றியச் செய்தார் சுவாமி விவே­கா­னந்தர். இன்று மட்­டக்­க­ளப்பு விவே­கா­னந்தா விளை­யாட்டுக் கழகத் திடலில் பெரும் எண்­ணிக்­கையில் திரண்­டி­ருக்கும் எமது மக்­க­ளுக்கு நான் கூறு­வதும் அதுவே.எழுமின்! விழிமின்!இலட்­சி­யங்­களை அடையும் வரை நிறுத்­தா­தீர்கள்!

எமது பாதை கரடு முர­டாக அமையப் போகின்­றது. அதற்கு நாங்கள் எங்­களைத் தயார் படுத்த வேண்­டி­யி­ருக்­கின்­றது. 69 வரு­டங்­க­ளுக்கும் மேலாக நாங்கள் எங்கள் குறை­களைக் கூறிக் கொண்டு வரு­கின்றோம். ஆனால் செவிடன் காதில் மகுடி இசைத்த கதை­யா­கவே இருந்து வரு­கின்­றது.இதற்குக் காரணம் உறங்­கு­ப­வனை எழுப்­பலாம். உறங்­கு­வது போல் பாசாங்கு செய்­ப­வனை எழுப்­பு­வது மிகச் சிரமம். ஒரு வேளை பச்சைத் தண்ணீர் கொண்டு முகத்தில் தௌித்தால் அவன் எழும்பக் கூடும். உறங்­கு­ப­வர்கள் போலக் காண்­ப­வரை உசுப்பி எழுப்­பவே இந்த எழுக தமிழ் நடை­பெ­று­கின்­றது.

 மக்­களின் மனோ நிலை­யையே நாங்கள் பிர­தி­ப­லிக்­கின்றோம்.

எங்கள் நட­வ­டிக்­கைகள் பிழை­யென்றும்,நாட்டில் இருக்கும் நற்­சு­ழலை நாங்கள் குழப்­பு­கின்றோம் என்றும் எங்கள் மீது குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. நாங்கள் வாய்­பேசா மடந்­தை­க­ளாக இருந்தால் அல்­லது பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­க­ளுடன் ஒத்­தூ­தினால் எங்­க­ளுக்கு நற்­சாட்சிப் பத்­திரம் கிடைக்கும். துணிந்து எமது குறை­களைக் கூறினால் அது ஒற்­று­மையைச் சீர்­கு­லைக்கும் செயல் எனப்­படும். ஆக­மொத்தம் எமக்­கெது தேவை என்­ப­திலும் பார்க்க தாம் தரு­வதை நாங்கள் ஏற்க வேண்டும் என்­ப­தி­லேயே குறி­யாக இருக்­கின்­றார்கள் பெரும்­பான்மை இன அர­சி­யல்­வா­திகள். இன்னும் சில காலம் போனால் எங்­களைப் பயங்­க­ர­வா­திகள் என்­பார்கள் என்று நினைக்­கின்றேன். ஏற்­க­னவே அவ்­வாறு கூறி­வ­ரு­கின்­றார்­க­ளோநான் அறியேன்.

உரி­மை­களை கோரினால் பயங்­க­ர­வா­திகளா 

உரி­மை­களைக் கோருவோர், உரி­மை­க­ளுக்­காகப் போரா­டுவோர், உரி­மை­களைத் தாருங்கள் என்று உரக்கக் கேட்போர் யாவரும் ஆட்­சி­யா­ளர்கள் பார்­வையில் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள். அன்­று ­வெள்ளை­யனே வெளியேறு என்­ற­வர்­க­ளெல்லாம் சட்­டத்தின் முன் குற்­ற­வா­ளிகள் ஆக்­கப்­பட்­டார்கள். வெள்ளையன் வெளியே­றி­யதும் கெப்­பற்­றிப்­பொ­லவும், சூர­ச­ர­தி­யேலும் இன்னும் பலரும் சிங்­கள மக்­களின் வீர சூரர்கள் ஆனார்கள். இன்று எம்மை பயங்­க­ர­வா­தி­க­ளாகப் பார்ப்­ப­வர்கள் இவற்­றை­யெல்லாம் எண்­ணிப்­பார்க்க வேண்டும். எமது உரி­மை­களை நாம் கோரு­வது குற்­ற­மல்ல என்­பதை எமது சிங்­களச் சகோ­த­ரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எம்மைப் பயங்­க­ர­வா­திகள் என்போர் என்ன கூறப் பார்க்­கின்­றார்கள்? நாங்கள் எங்கள் இரா­ணு­வத்தை வடக்கு, கிழக்கில் நிறுத்­தி­யுள்­ளோம். ­ப­யங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை அமுலில் வைத்­தி­ருக்­கின்றோம். ஆறா­வது அர­சியல் யாப்புத் திருத்தச் சட்­டத்­தை­யும் ­தொ­டர்ந்து அமுலில் வைத்­தி­ருக்­கின்றோம். பன்­னாட்டு அர­சாங்­கங்­களின் பரிந்­து­ரை­களைப் பெற்­றுள்ளோம். இவ்­வா­றி­ருக்­கவும் நீங்கள் உங்கள் உரி­மை­களைக் கேட்­கின்­றீர்கள் என்றால் நீங்கள் பயங்­க­ர­வா­திகள் தானே என்­பது தான் தொடர்ந்து வந்த அர­சாங்­கங்­களின் அர­சியல் நிலை.

உரி­மைகள் அற்­ற­வர்கள் தான் உரி­மை­க­ளையும் உரித்­துக்­க­ளையும் கேட்­பார்கள். உரி­மைகள் இருந்­தி­ருந்தால் ஏன் வெயிலில் இருந்து, பனியில் காய்ந்து, மழையில் நனைந்து கேட்­கப்­போ­கின்­றார்கள்? இல்­லா­த­தால்­தானே கேட்­கின்றோம். இதைச் சிங்­கள சகோ­தர சகோ­த­ரிகள் உணர வேண்டும். எம் உரித்­துக்­களை நாம் கோர விடாது அடுத்து வந்த அர­சாங்­கங்கள் தடுத்­துள்­ளன. கடு­மை­யான சட்­டங்­க­ளாலும் இரா­ணுவப் பிர­சன்­னங்­க­ளாலும் அர­சியல் யாப்பு அனு­ச­ர­ணை­க­ளு­டனும் இதைச் சாதித்­துள்­ளார்கள்.

போர்க்­குற்ற விசா­ரணை

அது மட்­டு­மன்றி கடைசிப் போர் ஒரு­த­லைப்­பட்­ச­மாக சர்­வ­தேச நிறு­வ­னங்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், ஊட­கங்கள் எவ­ரு­டைய பிர­சன்­னங்­களும் இல்­லாத நிலையில் சர்­வ­தேச போர் விதி­க­ளுக்கு மாறாக மேற்­கொள்­ளப்­பட்டு முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதை சிங்­கள மக்கள் யாவ­ரும்­ அ­றிவர். அவ்­வே­ளையில் கொல்­லப்­பட்­ட­வர்கள் விடு­தலைப் புலிகள் மட்­டு­மல்ல. சாதா­ரண அப்­பாவிப் பொது­மக்களும் பெரு­வா­ரி­யாகக் கொல்­லப்­பட்­டனர். அவர்­களின் எண்­ணிக்கை திரி­பு­ப­டுத்­தப்­பட்டு மிகச் சொற்ப தொகை­யாக எந்­த­வித மனச்­சாட்­சி­யு­மின்றி சர்­வ­தேச உல­கிற்கு காட்­டப்­பட்­டுள்­ளது. இதனால் விளைந்­தது தான் சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ரணை முன்­மொ­ழிவு. இந்தத் தீர்­மானம் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐக்­கிய நாடுகள் சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது சர்­வ­தே­சமும் இலங்கை அர­சாங்­கமும் ஒன்­றி­ணைந்து அதனை ஏற்­றுக்­கொண்­டனர். இருந்­த­போ­திலும் ஒன்­றரை வரு­டங்கள் கழிந்த பின்­னரும் இலங்கை அர­சாங்கம் தான் அளித்த முக்­கிய வாக்­கு­று­தி­களை இது­காறும் நிறை­வேற்ற முன்­வ­ர­வில்லை.

அண்­மையில் இன்­ன­லுறும் கேப்­பாப்­பு­லவு மக்­களைக் காணச் சென்­றி­ருந்தேன். போகும் வழி­யெல்லாம் ஏக்கர் ஏக்­க­ரான காடடர்ந்த நிலங்­களைக் கொங்­கிறீட் கட்­டைகள் நாட்டி, கம்பி போட்டு, கைய­கப்­ப­டுத்தி வைத்­துள்­ளார்­கள் ­ப­டை­வீ­ரர்கள். அவற்­றில் மக்­களின் உறுதிக் காணி­களும் அடங்­கு­வன. தம் சொந்த இடங்­க­ளுக்கு எம் மக்கள் திரும்பிச் செல்­வ­தற்கு ஆங்­காங்கே தடை­யாக உள்­ளார்கள் இரா­ணு­வத்­தி­னரும், கடற் படை­வீ­ரர்­களும், ஆகாயப்படை வீரர்­களும். அதற்கு எதி­ராக எம்­மக்கள் ஆர்ப்­பாட்டம் செய்தால் அவர்­களைத் துன்­பு­றுத்­து­கின்­றார்கள்.

ஏன் என்று இவர்­க­ளிடம் கேட்டால் பாது­காப்­புக்கு அவ­சியம் என்­கின்­றார்கள். யார் பாது­காப்­புக்­காக இந்த அடா­வ­டித்­தனம்? எங்கள் பாது­காப்­புக்­கா­கவா அல்­லது உங்கள் பாது­காப்­புக்­கா­க­வா­ அல்­லது அர­சி­யல்­வா­தி­களின் பாது­காப்­புக்­கா­கவா என்று கேட்டால் பதி­லில்லை. எங்­க­ளுக்கு உங்கள் பாது­காப்பு தேவை­யில்லை என்று திரும்பத் திரும்பக் கூறு­கின்றோம். போதிய பொலிஸார் இருந் தால் பொறுப்­பாக அவர்கள் பாது­காப்பு வழங்­கு­வார்கள் என்று நாங்கள் கூறினால் அதற்கு அவர்கள் செவி­சாய்க்­கின்­றார்கள் இல்லை. அவர்கள் போட்­டி­ருக்கும் பாது­காப்பு அரண்­க­ளையும், கட்­டி­யுள்ள மாளி­கை­க­ளையும், எடுத்­தி­ருக்கும் எம்­மக்­களின் காணி­களின் விஸ்­தீ­ர­ணத்­தையும் பார்த்தால் இன்னும் 500, 600 வரு­டங்­க­ளுக்கு மேலாகத் தாம் தொடர்ந்­தி­ருக்கப் போகின்­றார்கள் என்ற எண்­ணத்­தில் தான் அவர்கள் இருக்­கின்­றார்கள் என்­பதை அது ­தெளி­வாக எடுத்துக் காட்­டு­கின்­றது. அவர்கள் செய்­வது பிழை என்று நாங்கள் கூறினால் நீங்கள் சமா­தா­னத்தைச் சீர்­கு­லைப்­ப­வர்கள் என்று எமக்குப் பட்டம் கட்டப் பார்க்­கின்­றார்கள்.

முன்னர் இந்­திய அமைதி காக்கும் படைகள் நாங்கள் இங்கு 100 வரு­டங்­க­ளுக்­கேனும் இருக்கப் போகின்றோம் என்று கூறிக்­கொண்டு தான் வந்­தார்கள். வி.பி.சிங் அர­சாங்கம் அவர்­களைத் திரும்ப அழைத்­தது. அது போல எங்கள் ஜனா­தி­பதி சிறி­சே­னவின் அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­னரைத் திரும்ப அழைக்க வேண்டும். தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற மனி­தா­பி­மா­னத்­துடன் பக்­கச்­சார்­பின்றி போருக்குப் பின்­ன­ரான மக்­களின் பாதிப்­புக்­களை உணர்ந்து செயற்­ப­டக்­கூ­டிய பொலி­ஸாரை வட­கி­ழக்கில் இரட்­டிப்­பாக நிலை­நி­றுத்த வேண்டும் என்­பதே எமது ஒரு கோரிக்கை.

இரா­ணு­வத்தை மீளப்­பெ­றா­ததன்  மர்மம் என்ன?

போர் முடிந்து 8 வரு­டங்கள் ஆகியும் இரா­ணு­வத்­தி­னரைத் திரும்ப அழைக்­கா­ததன் மர்மம் என்ன? விடு­த­லைப்­பு­லி­களை முற்­றாக அழித்து விட்­ட­தாகக் கூறு­கின்­றார்கள். பின் எதற்­காக வடக்­கிலும் கிழக்­கிலும் வான் படை­களும், கடற்­ப­டை­களும், காலாட்­ப­டை­களும்? அள­வுக்­க­தி­க­மான படை­களைத் தம்­மு­டைய தரை­களில் நிலை நிறுத்த இட­மில்லை என்­றுதான் அவர்­களை எம்­ மத்­தியில் உலாவ விட்­டுள்­ளார்­களா? அல்­லது நாம் எவரும் சுதந்­தி­ரக்­காற்றை உட்­கொள்ளக் கூடாது என்று நினைக்­கின்­றார்­களா? அல்­லது எமது பொரு­ளா­தா­ரத்தைக் கட்டி எழுப்ப விடாது எம் மக்­களின் காணி­க­ளையும், வீடு­க­ளையும்,கடை­க­ளையும், கடற்­கரைத் தொழில்­க­ளையும், விவ­சாய நில புலன்­க­ளையும் நிரந்­த­ர­மாகச் சுவீ­க­ரித்து எம்மை அடக்கி ஆள நினைக்­கின்­றார்­களா?

ஒரு சில பெரும்­பான்மை அர­சி­யல்­வா­தி­களும் எமது சிங்­கள சகோ­த­ரர்கள் சிலரும் ஒரு விசித்­தி­ர­மான கருத்தை முன்­வைக்­கின்­றார்கள். “நாங்கள் தரு­வ­தையும் தர­மாட்டோம், நீங்கள் தகாத முறையில் ‘தா’ என்று கேட்டால்” என்று கூறு­கின்­றார்கள். எப்­பொ­ழு­தையா நீங்கள் தந்­தீர்கள்? தரு­வ­தாகக் கூறி­னீர்­களே ஒளிய தர­வில்­லையே! நீங்கள் தராத ஒன்­றைத்­தானே தாருங்கள் என்­கின்றோம். எம் உரித்­துக்­களைப் பறித்து வைத்துக் கொண்டு வெறு­மனே தரு­வ­தாக 60 வரு­டங்­க­ளுக்கு மேலாகக் கூறிக் கொண்டு வந்து விட்டு இப்­பொ­ழுது “நீங்கள் கேட்டால் தர­மாட்டோம் என்­பதன் அர்த்தம் என்ன? நாம் நினைத்­ததைத் தான் தருவோம்.” நீங்கள் கேட்­பதைத் தர மாட்டோம் என்­பது தானே அர்த்தம்? ஆனால் சட்­டத்தில் அப்­படிக் கூறப்­ப­ட­வில்­லையே. உரி­மைகள் உரித்­துக்கள் பெரும்­பான்மை மக்­க­ளுக்கு மட்டும் தான் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அல்ல என்று சட்டம் கூற­வில்­லையே! மேலும் வடக்கு, கிழக்கில் 2000 வரு­டங்­க­ளுக்கு மேலாக தமிழ் பேசும் மக்கள் தான் பெரும்­பான்­மை­யினர். ஆகவே நாங்­களும் எங்கள் பிர­தே­சங்­களில் பெரும்­பான்­மை­யி­னரே. எனினும் சட்டம் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு ஒரு நீதி சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஒரு நீதி என்று கூற­வில்லை. ஒவ்­வொரு தனி­ம­னி­த­னுக்கும் சில பல உரித்­துக்கள் இருப்­பதைச் சட்டம் அங்­கீ­க­ரிக்­கின்­றது, ஏற்­றுக்­கொள்­கின்­றது. அதற்கு மேலாகக் குழு­மங்­களின், மனித குழுக்­களின் உரித்­துக்­க­ளையும் சட்டம் ஏற்­றுள்­ளது. நாம் இழந்த உரி­மை­களை ஜன­நா­யக ரீதியில் மீளப் பெறு­வ­தற்கு முயற்­சிப்­பது வகுப்­பு­வா­த­மா­கவோ, தீவி­ர­வா­த­மா­கவோ, அநீ­தி­யா­கவோ கருத முடி­யாது. ஐக்­கிய நாடுகள் சபையின் சர்­வ­தேச நிய­தி­க­ளுக்கு அமை­வாக ஒப்­புக்­கொள்­ளப்­பட்ட உரிமை சாச­னங்­களின் அடிப்­ப­டையில் ஒரு இனத்தின் உரி­மைகள், அடை­யா­ளங்கள் மற்றும் மரபு ரீதி­யான, சரித்­திர ரீதி­யான வதி­வி­டங்கள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் ஒன்­று­பட்ட ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்வை எட்­டு­தலே எமது குறிக்­கோ­ளாகும்.

1987ஆம் ஆண்டில் நாங்கள் பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்ட மூலம் தந்தோம் அல்­லவா என்­கின்­றார்கள் சில சிங்­களத் தலை­வர்கள். நீங்கள் எங்கே தந்­தீர்கள்? அது இந்­தி­யாவின் அனு­ச­ர­ணையால் கிடைத்­தது. அதுவும் இந்­தி­யர்­க­ளுக்குத் தெரி­யாமல் சட்­டத்தைப் பல­மற்­ற­தாக மாற்­றிய பின்­னரே தரப்­பட்­டது. தரு­வ­தற்கு உங்­க­ளுக்கு மன­மி­ருந்தால் நாங்கள் கேட்­கா­மலே தந்­தி­ருப்­பீர்­களே!

சம்­பந்­தனின் நம்­பிக்கை

இந்த யதார்த்­தத்­தைத்தான் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் முன்னாள் தலை­வர்கள் அமரர் அமிர்­த­லிங்கம், அமரர் சிவ­சி­தம்­பரம் ஆகி­யோரும் தற்­போ­தைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தனும் 28.10.1987ஆம் ஆண்டு முன்னாள் இந்­தியப் பிர­தமர் ரா­ஜீவ்­காந்திக்கு அனுப்­பிய கடி­தத்தில் வெகு விப­ர­மாக எழுதி அவ­ரு­டைய தலை­யீட்டை எதிர்­பார்த்­தி­ருந்­தனர். ஆனால்­ அது நடை­பெ­ற­வில்லை.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் உங்­களை எவ்­வ­ளவு நம்­பினார்? 2016இல் கட்­டாயம் தரு­வார்கள் என்று எதிர்­பார்த்தார். தந்­தீர்­களா? உங்­க­ளுக்குத் தர மன­மில்லை என்­பது உல­க­றிந்த விடயம். எனவே நாங்கள் கூட்டம் கூடிக் கேட்க வேண்­டிய நிலைக்கு எங்­களைத் தள்­ளி­யது நீங்­களே என்று அர­சாங்­கத்தைப் பார்த்துக் குறை கூறு­கின்றேன். எங்கள் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்­தி­யதும் உங்­க­ளா­லேயே என்று குற்றம் சாட்­டு­கின்றேன்.

முன்­னைய ஜனா­தி­ப­தியின் காலத்தில் அவர் 18 சுற்றுப் பேச்­சுக்கள் நடத்­தினார் தமி­ழர்­க­ளுடன். ஏதேனும் தந்­தாரா? இப்­பொ­ழுது ஜெனி­வாவில் மார்ச் மாதத்தில் கூட்டம் போடப் போகின்­றார்கள் என்­றதும் அதைத் தரப்­போ­கின்றோம், இதைத் தரப்­போ­கின்றோம் என்று விட்டு இன்று வரையில் ஒன்­றுமே தர­வில்லை, தர எத்­த­னிக்­கவும் இல்லை. இரு­ப­துக்கு மேலான உத்­த­ர­வா­தங்­களை இலங்கை அர­சாங்கம் ஜெனி­வாவில் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு 2015ம் ஆண்டு செப்­டெம்பர் மாதத்தில் அளித்­தது. எவ்­வெ­வற்றை இது­வ­ரையில் நிறை­வேற்­றி­யுள்­ளார்கள்? நிறை­வேற்­றி­ய­தாகக் கூற எத்­த­னிப்­ப­வை­க­ளிலும் மக்­க­ளுக்கு பயன் ஏதும் கிடைத்­துள்­ளதா? மாறாக அர­சியல் யாப்பு உரு­வாக்­கத்தின் நிமித்தம் போர்க்­குற்ற விசா­ரணை தேவை­யில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா கூறி­யுள்ளார். இவை இரண்­டுக்கும் தொடர்பே இல்லை. ஒன்று நடந்து முடிந்­தது. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கப்­பட வேண்டும். மற்­றை­யது இன்னும் நடை­பெ­றா­தது. அர­சியல் சம்­பந்­த­மான எமக்­கி­ருக்கும் உரித்­துக்­களைத் தர, எம்­மிடம் இருந்து பறித்­தெ­டுத்த உரித்­துக்­களைத் தர, பாதிக்­கப்­பட்ட எம்­மக்­களின் நல­னையும் உரி­மை­க­ளையும் விலை­பேசப் பார்க்­கின்­றாரா சந்­தி­ரிகா?

அது­மட்­டு­மல்ல. அண்மைக் காலங்­களில் எமக்கு ஏற்­க­னவே இருக்கும் உரித்­துக்­களைத் திரும்பப் பெறும் கைங்­க­ரி­யத்திலும் ஈடு­பட்டு வரு­கின்­றது அர­சாங்கம். மேலும் எம்­மா­காணக் காணி­களில் தென்­ன­வர்­களைத் தேர்ந்­தெ­டுத்துக் குடி­ வைக்­கின்­றார்கள். எம்­ம­வரை அவற்­றி­லி­ருந்து துரத்­து­கின்­றார்கள். எமக்­கி­ருக்கும் காணி உரித்­துக்­களைத் தம­தாக்கிக் கொண்டு மேலும் மேலும் படை­யி­ன­ருக்கு மேல­திகக் காணி­களை சுவீ­க­ரிக்க நட­வ­டிக்­கைகள் எடுத்து வரு­கின்­றார்கள்.

தாம் செய்யும் தவ­று­களை மூடி மறைத்து விட்டு எம்மேல் பழியைப் போட எத்­த­னிக்­கின்­றது அர­சாங்கம். இந்­நி­லையில் தான் நாம் மிகவும் விழிப்­ப­டைய வேண்­டிய ஒரு தேவை எமக்கு ஏற்­பட்­டுள்­ளது.

எம்மை விமர்­சித்­தனர்

எமது அர­சியல் தேவைகள் மற்றும் தமிழ் மக்­களின் சுய நிர்­ணய உரி­மைகள் ஆகி­ய­வற்றை இந்த அரசின் புதிய அர­சியல் யாப்பில் சேர்த்துக் கொள்­வ­தற்கு ஏற்ற வகை­யி­லான சில அர­சியல் அறி­வு­ரை­களை அர­சுக்கு எடுத்துக் கூறு­கின்ற அத்­துடன் மக்கள் உணர்­வு­களைப் பிர­தி­ப­லிக்கக் கூடிய ஒரு நிகழ்­வா­கவே “எழுக தமிழ்” நிகழ்வை நாம் அன்று யாழ்ப்­பா­ணத்தில் முன்­னெ­டுத்­தி­ருந்தோம். ஆனால் அதன்பின் எம்மைப் பலரும் பல வித­மாக விமர்­ச­னத்­திற்கு உள்­ளாக்­கி­யது மட்­டு­மன்றி நாம் புதிய அர­சியல் கட்சி ஒன்றை ஆரம்­பிப்­ப­தற்­கான முத்­தாய்ப்பு வேலை­களில் ஈடு­ப­டு­கின்றோம், தமிழ் மக்­களின் ஒட்­டு­மொத்தப் பலத்­தையும் கூறு­போ­டு­கின்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்றோம் என எமது தமிழ் அர­சியல் தலை­மைகள் கூட நேர­டி­யா­கவும் அதே­நேரம் மறை­மு­க­மா­கவும் கருத்­துக்­களை முன்­வைக்­கத்­த­லைப்­பட்­டனர். அவர்­க­ளுக்குப் பக்­க­ப­ல­மாக நாங்கள் நிற்­கின்றோம் என்­பதை மறந்து அவ்­வாறு கூறத் தலைப்­பட்­டார்கள்.

அதே­போன்று சிங்­களத் தலை­மை­களும் எம்மை அடிப்­ப­டை­வா­திகள், அர­சியல் குழப்­பத்தை உண்­டு­பண்ண முயல்­ப­வர்கள் எனப் பல்­வேறு வித­மாக சித்­த­ரித்­த­துடன் நாம் அர­சுக்கு எதி­ரான தீவி­ர­வாதப் போக்கைக் கொண்ட ஒரு அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்றோம் என்ற தவ­றான கருத்­துக்­க­ளையும் முன்­வைக்கத் தலைப்­பட்­டனர்.

நாம் அன்று தெரி­வித்த அதே கருத்­துக்­க­ளையே இன்றும் வலி­யு­றுத்­து­கின்றோம். ஏனென்றால் எமது கருத்­துக்கள் கடந்த 69 வரு­ட­கா­ல­மாக எம்மால் கூறப்­பட்­டு­வரும் கருத்­துக்­களே. அதில் மாற்றம் எது­வு­மில்லை. புதி­தாக நாம் எதுவும் கேட்­க­வில்லை. எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் கூறி எம் மக்கள் அங்­கீ­க­ரித்த அதே கருத்­துக்­க­ளையே நாம் கூறி வரு­கின்றோம்.

வடக்கு, கிழக்கு இணைப்பு

வடக்கு,கிழக்கு இணைப்பு, சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்வு என்­பன நேற்று, இன்று முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்கள் அல்ல. இந்தக் கருத்­துக்­கள்­ அன்று முன்­வைக்­கப்­பட்­ட­தா­லேயே பண்­டா­ர­நா­யக்கா –செல்­வ­நா­யகம் உடன்­பாடு உரு­வா­கி­யது. ஆனால் அந்த உடன்­பாடு கிழித்­தெ­றி­யப்­பட்­டது. டட்லி–செல்­வ­நா­யகம் உடன்­பாடும் அதே கருத்­துக்­க­ளையே பிர­தி­ப­லித்­தன. ஆனால் அந்த உடன்­பாட்­டுக்கும் அதேகதியே. இந்­தி­யாவின் அனு­ச­ர­ணையால் 13ஆவது திருத்­தச்­சட்டம் யாக்­கப்­பட்­டதால் இது­வ­ரையில் அது நடை­மு­றையில் இருக்­கின்­றது. ஆனால் அத­னையும் சட்டம் கொண்டும் சுற்­ற­றிக்­கைகள் கொண்டும் மலி­னப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள் மத்­தியில் உள்ள பெரும்­பான்மை இனத் தலை­வர்கள். எனவே தான் எமது கோரிக்­கை­களை மேலும் முன்­வைக்க வேண்­டிய அவ­சியம் எமக்­கெ­ழுந்­துள்­ளது. நாங்கள் குழப்பம் விளை­விக்­க­வில்லை. குழப்­பத்­திற்குக் கார­ணமே தொடர்ந்து வந்த பெரும்­பான்­மை­யின அர­சியல் தலை­வர்கள் தான். கூட்­டாட்சி என்றால் பிரி­வி­னையே என்ற பொய்யை சிங்­கள மக்­க­ளுக்கு இது­காறும் கூறி­வந்­த­வர்­களும் இந்தத் தலை­வர்­களே.

இலங்­கையில் இடம்­பெற்ற பாரிய இன அழிப்பு யுத்­த­மா­னது 2009ஆம் ஆண்டில் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலை­யிலும், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான அப்­பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்டு இன்னும் பலர் ஊன­முற்­ற­வர்­க­ளாக எழுந்து நட­மாட முடி­யா­த­வர்­க­ளாக மாற்­றப்­பட்ட நிலை­யிலும், வீடு, வாசல், சொத்து, சுகம், காணி, பூமி என அனைத்­தையும் இழந்து கையறு நிலையில் ஏதி­லி­க­ளாக எமது மக்கள் செய்­வ­த­றி­யாது திகைத்து நின்ற வேளை­யிலும் நாம் ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டி முறை­யி­லான ஒரு அர­சியல் தீர்­வையே நாடி­யி­ருந்­தோம். ­நா­டு­கின்றோம். எனினும் அர­சியல் யாப்­புக்­களில் பூர­ண­மான அல்­லது வலு­வான திருத்­தங்­களை மேற்­கொள்ள விழைந்தால் அவற்றை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்­களின் மூலமே நிறை­வேற்ற வேண்டி வரும் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் அதை விரும்ப மாட்­டார்கள் எனப் பூச்­சாண்டி காட்டித் தீர்­வு­களை மலி­னப்­ப­டுத்­து­வதும், அடிப்­ப­டை­யாகக் கொடுக்க வேண்­டி­ய­வற்றை கொடுக்­காமல் விடு­வ­தற்கு அதனை ஒரு சாட்­டாக கைக்­கொள்­கின்ற யுக்­தி­யையும் அர­சுகள் கடைப்­பி­டித்து வந்­துள்­ளன.

இதே தந்­தி­ரத்­தையே இப்­பொ­ழுதும் ஒரு சாரார் கையாள முயற்­சிக்­கின்­றனர். இது நாம் எழுந்­த­மா­ன­மாகச் சொல்­லு­கின்ற ஒரு கருத்­தல்ல. இந்த அரசில் அங்கம் வகிக்­கின்ற இரு பெரும்­பான்மை அரசுக் கட்­சி­களும் இந்த நாட்டின் அர­சியல் அமைப்பு ஒற்­றை­யாட்­சிக்­கு­அ­மை­வா­கவே தொடரும் என்றும் இந்த நாட்டில் சமஷ்டி அர­சியல் அமைப்­பிற்கு இட­மில்லை எனவும் இந்த நாடு மத சார்­பற்ற நாடாக மாறாது என்றும் உரக்கக் கூறு­வதை நாம் காண்­கின்றோம். அதற்கும் மேலாக ஒரு அர­சியல் தலைவர் 13 ஆவது அர­சியல் அமைப்புத் திட்­டத்தில் வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளுக்கு மேலே மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்­கு­வது பற்றி சிந்­திக்­கின்ற தருணம் இது­வல்ல என்று கண்டி யில் வைத்து தெரி­வித்­தி­ருப்­பது கவ­னிக்­கப்­படல் வேண்டும். இவற்­றை­யெல்லாம் பார்க்­கின்ற போது அர­சியலமைப்பு திருத்­தத்தில் இப்­போது இருக்­கின்ற நிலையை விட ஒரு சிறு முன்­னேற்றம் கூட ஏற்­படும் என்று எண்ணத் தோன்­ற­வில்லை. இது எமக்கு ஒரு புதிய வெளிச்­சத்தைக் காட்­டி­யுள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நடந்த முத­லா­வது “எழுக தமிழ்” நிகழ்ச்­சி­யையும் விட உறு­தி­யா­கவும் ஆக்ரோஷ­மா­கவும் எமது கோரிக்­கை­களை முன்­வைக்க வேண்­டிய தேவை இப்­போது ஏற்­பட்­டுள்­ளது என்­பதை உங்கள் அனை­வ­ருக்கும் கூறி­வைக்க விரும்­பு­கின்றேன்.

மீண்டும் மீண்டும் எங்­க­ளு­டைய கோரிக்­கை­களை நாம் உரத்துச் சொல்ல வேண்­டிய தேவையும் கடப்­பாடும் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. நாம் முன்­னெ­டுக்­கின்ற இந்­த ­எ­ழுக தமிழ்­ என்ற நிகழ்வு தமிழ் பேசும் மக்­க­ளுக்குக் கிடைக்க வேண்­டிய உரி­மை­களை ஜன­நா­யக முறைப்­படி கேட்­டெ­டுத்துப் பேணிப் பாது­காப்­ப­தற்­கான ஒரு முயற்­சியே தவிர அர­சியல் குட்­டையைக் குழப்பும் எண்­ணமோ அல்­லது வேறு எந்த கபட நோக்கோ எமக்­கில்லை.

மாறாக இந்த நாட்டில் இரண்­டா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு மேலான பூர்­வீக பாரம்­ப­ரி­யத்தைக் கொண்ட தனித்­து­வ­மான ஒரு தேசிய இனம், தமது இருப்பை உறுதி செய்து தம்மைத் தாமே ஆளக்­கூ­டிய ஒரு நிலையை உரு­வாக்­கு­வ­தற்கு ஏற்ற ஒரு அர­சியலமைப்பைப் பெற்றுக் கொள்­ளவே விழை­கின்­றது. எமது நட­வ­டிக்­கை­களை சர்­வ­தேச அர­சியலமைப்­புக்­களும் மற்றும் ஐக்­கிய நாடுகள் ஸ்தாப­னங்­களும் நன்­கு­ணர்ந்து எமக்குப் பூரண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று நாம் விரும்­பு­கின்றோம்.எங்கள் அர­சியல் கோரிக்­கைகள் நியா­ய­மா­னவை. நாங்கள் பிரி­வினை கோர­வில்லை. சமஷ்­டி­யையே கேட்­கின்றோம். கனடா, பெல்­ஜியம், சுவிட்­சர்­லாந்து போன்று நாட்டை ஒரு­மைப்­ப­டுத்தி தன்­மா­னத்­து­டனும் ஐக்­கி­யத்­து­டனும் வாழவே விரும்­பு­கின்றோம்.

எனினும் நாங்கள் அர­சாங்­கத்­திடம் கேட்க வேண்­டிய கேள்­விகள் சில உண்டு. அவை­பின்­வ­ரு­மாறு –

1. யுத்தம் முடி­வ­டைந்து எட்டு ஆண்­டுகள் பூர்த்­தி­ய­டைய இருக்கும் நிலை­யிலும் இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலங்கள் இன்னும் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­டா­தது ஏன்? மேலும் மேலும் கூடிய காணி­களைக் கைய­கப்­ப­டுத்த விளை­வது ஏன்? எமது சில உரித்­துக்­களைத் தட்டிப் பறித்து அதி­கார சபை ஒன்­றிடம் கைய­ளிக்கப் பார்ப்­பதின் தாத்­ப­ரியம் என்ன? சட்­டத்­திற்குப் புறம்­பாக வெளிமா­கா­ணங்­களில் இருந்து கொண்டு வந்து வட­மா­கா­ணத்­தினுள் பலாத்­கா­ர­மாக குடி­யேற்­றி­யுள்ள சிங்­கள குடி­யேற்றவாசி­களின் இருப்­பி­டங்­களைத் தமிழ் உள்­ளூ­ராட்சி வட்­டா­ரங்­க­ளுடன் சேர்க்க முனை­வதன் தந்­திரம் என்ன?

2. புத்த கோவில்கள் அமைப்­பது தொடர்பில் நாம் மிகத் தெளிவான கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தோம். புத்த கோவில்கள் கட்­டு­வதில் எமக்கு எவ்­வித ஆட்­சே­ப­மும் இல்லை. ஆனால் புதி­தாக அமைக்­கப்­ப­டு­கின்ற கோவில்கள் எந்த மதம் சார்ந்­த­தாக இருப்­பினும் எங்கே எப்­படி எவரால் அமைக்­கப்­பட வேண்டும் என்­ப­தி­லேயே கருத்து முரண்­பா­டுகள் தோன்­றி­யுள்­ளன என்று கூறி­யி­ருந்தோம். பௌத்த மதத்தை சார்ந்த மக்கள் வாழ்­கின்ற பகு­தி­களில் புத்த கோவில்­களை அமைப்­ப­தற்கு நாம் எது­வித மறுப்­புக்­க­ளையுந் தெரி­விக்­க­வில்லை. அவர்கள் அவற்­றுக்­கான உரிய அனு­ம­தி­களை முறை­யாகப் பெற்று புதிய கோவில்­களை அமைத்துக் கொள்­ள­மு­டியும். அப்­ப­டி­யல்­லாது பௌத்­தர்கள் எவரும் நிரந்­த­ர­மாக குடி­யி­ருக்­காத பகு­தி­களில் எந்­த­வித முன்­ன­னு­ம­தி­களும் இன்றி தனி­யார்­களின் காணி­க­ளிலும் இரா­ணு­வத்­தினர் உத­வி­யுடன் அடாத்­தாக கைப்­பற்­றப்­பட்ட அரச காணி­க­ளிலும் புதிய புதிய பௌத்த கோவில்­களை அமைப்­பதும் பிற மத வணக்­கஸ்­த­லங்­களை இடித்து அழிப்­ப­து­மா­கிய செயற்­பா­டு­க­ளில்­ ஈ­டு­ப­டு­வது எதற்­காக?

3. பாரிய உடல் உபா­தைக்கு உள்­ளான அங்­க­வீ­னர்கள் வன்னி மாவட்­டத்தில் மட்டும் ஆயி­ரக்­க­ணக்கில் உத­விக்­காக காத்­தி­ருக்­கின்­றனர். எனினும் அர­சினால் வழங்­கப்­ப­டு­கின்ற நிதி 300 பேர் வரை­யான பய­னா­ளி­க­ளுக்கு மட்­டுமே வழங்கக் கூடி­ய­தாக உள்­ளது. இந்­நி­லையில் உதவி பெறுநர் ஒருவர் மர­ணிக்­கின்ற வேளை­யி­லேயே இன்­னொ­ரு­வ­ருக்கு இவ்­வு­தவி கிடைக்கக் கூடிய துர்­பாக்­கிய நிலைக்கு அவர்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு புனர்­வாழ்வு அளிக்­கின்றோம் என பெரு­ம­ளவில் விளம்­பரம் செய்யும் அரசு மிகவும் அவ­ச­ர­மான அடிப்­படைத் தேவை­களைக் கொண்ட மாற்றுத் திற­னா­ளி­க­ளுக்கு அல்­லது அங்­க­வீ­னர்­க­ளுக்கு கூட உதவ முடி­யா­தி­ருப்­பது ஏன்?அசூ­யையா? அக்­க­றை­யின்­மையா? அலட்­சி­யமா? அர­சியல் பழி­வாங்­கலா?

4. பொருத்து வீடுகள் வேண்டாம் என்­றதும் வங்கிக் கடன் பெற்று வீடுகள் கட்டித் தரு­வ­தாகக் கூறப்­பட்­டது. ஆனால் திரும்­பவும் பொருத்து வீடு­களை எம் மாகா­ணத்தில் அறி­மு­கப்­ப­டுத்த விளை­வதன் மர்மம் என்ன?

5. பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தைக் கைவாங்­காமல் அர­சியல் கைதி­களைத் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்­தி­ருப்­பது ஏன்?

6. விடு­த­லைப்­பு­லி­களை முற்­றாக அழித்­து­விட்­ட­தாக அர­சாங்கம் அறி­வித்த பின் புலிகள் திரும்­பவும் வந்­து­விட்­டார்கள் அல்­லது வரப் போகின்­றார்கள் என்று பூச்­சாண்டி காட்­டு­வது என்ன கார­ணத்­திற்­காக? அதுவும் எமது மக்கள் வன்­முறை களைந்து ஒரு­மித்த ஒரு நாட்­டினுள் சமஷ்­டியே சிறந்­தது என்று கனடா, சுவிட்­சர்­லாந்து, பெல்­ஜியம் போன்ற நாடு­களின் முன்­மா­தி­ரியை எடுத்துக் காட்டி ஜன­நா­யக ரீதி­யாக அர­சியல் நட­வ­டிக்­கை­களைக் கொண்டு செல்ல முன்­வந்­தி­ருக்கும் இந்த நேரத்தில் இவ்­வா­றான பொய்­யான புனைந்­து­ரை­களைப் பகர்­வதின் நோக்கம் என்ன?

7. காணாமல் போன­வர்கள் சம்­பந்­த­மாக வலு­வற்ற ஒரு சட்­டத்தைக் கொண்டு வந்து விட்டு அதைக் கூட நடை­மு­றைப்­ப­டுத்த முன் வரா­ததின் காரணம் என்ன?

முஸ்­லிம்கள் இணைய வேண்டும்

இறு­தி­யாக ஒரு முக்­கிய விட­யத்தை இந்த மட்­டக்­க­ளப்பு மண்ணில் கூற விரும்­பு­கின்றேன். இன்­றைய நிலையில் இந்த நாட்டில் தமிழ் மொழியைப் பேசு­கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் சகோ­த­ரர்கள் ஒன்­றாக இணைந்து கொண்டு அரசின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராகக் குரல் கொடுப்­ப­தற்கும் எமது அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கும் அவற்றைப் பாது­காப்­ப­தற்கும் தொடர்ந்தும் முயற்­சிக்க வேண்டும்.தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் அரசு ஈடு­பட்­டி­ருந்த வேளையில் தமது போர் யுக்­தி­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் இன்னும் பல்­வேறு தேவை­க­ளுக்கும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களைத் தம்­முடன் இணைத்துக் கொண்டு அவர்­க­ளுக்கு மேல­திக அமைச்­சுக்கள் எனப் பல சலு­கை­களை வழங்கி தமிழ் பேசும் மக்­க­ளி­டையே பிரி­வி­னையை வளர்க்க முற்­பட்­டது.இன்று தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான ஆயுதப் போராட்டம் முடி­வ­டைந்த நிலையில் பெரும்­பான்மை இனத்தின் கழுகுப் பார்­வையை முஸ்லிம் சகோ­த­ரர்கள் மீது திருப்பி முஸ்­லிம்­களின் வணக்கஸ் தலங்­களை உடைப்­பதும் குடி­யேற்­றங்கள் தொடர்பில் இன ரீதி­யான கருத்­துக்­களை முன்­வைப்­பதும், துவேஷ மனப்­பான்­மையை வளர்ப்­பதும் எதற்­காக?

எனது நண்­பரும் தமிழ்ப் பற்­றா­ள­ரு­மான அமரர் அஷ்ரப் 1975 ஆம் ஆண்­டி­லி­ருந்து தந்தை செல்வாவின் விசுவாசியாக இருந்தவர். 1976ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி புத்தளம் பள்ளிவாச லில் 6 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்ப ட்ட போது அக்காலத்தில் நாட்டிலிருந்த எந்தவொரு முஸ்லிம் தலைமைப்பீடங் கூட கண்டனம் தெரிவிக்க வில்லை. தந்தை செல்வா மாத்திரம் இவ்விடயம் சம்பந்தமாகக் கண்டனம் தெரிவித்து தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடனான எமது ஒருமைப்பாட்டுக்கு வழிகோலும் காரணியாக இருந்தார். அதுமாத்திர மன்றி 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தம்பி அஷ்ரப் பங்குபற்றியிருந்தார் என்று எனக்கு ஞாபகம். சுதந்திரத்தின் பின்பு அனேகமான முஸ்லிம் தலைவர்கள் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராாளுமன்றத்திற்கு சென்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வேறுபாடின்றி சேவையாற்றியுள்ளனர். கிழக்கு மாகாணத் தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்த் திருவலும் போல இரண்டறக் கலந்தவர்கள், பிரிக்கவே முடியாதவர்கள். என்று கூறியவர் வேறுயாருமல்ல காலஞ் சென்ற அமரர் அஷ்ரப் அவர்களே.

மேலும் முஸ்லிம் மக்களில் பலர் தமிழ் மொழியில் மிக்க பாண்டித்தியமும், புலமையும் கொண் டவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல. இன்றும் தமிழ் மொழியை மிகவும் நேசிப்பவர்களாகவும் இச்செம் மொழியை மேம்படுத்துவதற்கு உழைப்பவர் களாகவும் உள்ளார்கள். எம்முடன் கிழக்கு முஸ்லிம் தமிழ் அறிஞர்கள் கொழும்பு கம்பன் கழக விழாவில் பங்கு பற்றி தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிவரும் சேவைகள் மறக்கமுடியாதன. ஆனால் 1980ஆம் ஆண் டின் நடுப்பகுதிகளின் பின்னர் இடம் பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அரசி யல் கருத்து வேற்றுமைகளும் எம் இரு சமூகத்தவர்களுக்கும் இடையில் இடை வெளியை உருவாக்கிவிட்டது இருந்த போதி லும் உரிய தேவையான சந்தர்ப்பங்களில் இயற்கையாகவே சகோதரர்களாக நாம் மாறி விடுவதை, ஒன்றுபட்டு நாம் உழைப்பதை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மேற்கூறியவாறு ஏற்பட்ட சில சம்பவங் கள் எம்மிடையில் ஆறாத வடுக்களை ஏற்ப டுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது. இருந்த போதிலும் தமிழ்த் தாயின் புதல்வர் கள் என்ற முறையில் முன்னர் எவ்வாறு எப்படி ஒற்றுமையை நிலைநாட்டினோமோ அவ்வாறே இன்றும் வேறுபாடுகளைக் களைந்து எமது உரிமைகள் ஆட்சியாளர்க ளால் உதாசீனம் செய்யப்பட்டு பறிக்கப்படும் போது நாம் ஒன்றுசேர்ந்து ஏகோபித்த குர லோடு எமது கோரிக்கைகளை முன்னெடுக் கவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும். தமிழ்–முஸ்லிம் ஒற்றுமை முயற்சிகளை முன்னெடுப்பதற்குத் தமிழ் மக்கள் பேரவை

தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் ஈடுப டுவதுடன் சகல இனப் பாதுகாப்பிற்காகவும் நாம் அல்லும் பகலும் பாடுபடுவோம். எம் முடன் நீங்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றி, பிரதேச வாதம், வர்க்க பேதம் இன்றி, ஆண்–பெண் பேதமின்றி, மத பேதமின்றி அரசின் தவறான நடவடிக்கைகளைக் கண் டிக்க முன் வரவேண்டும். தமிழ்பேசும் மக்

களுக்கு ஒரே அரசியல் தீர்வாக விளங்கக் கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பின் தேவையை வலியுறுத்த வேண்டும். முஸ்லிம் மக்களுக்கும் ஒரு சமஷ்டி அலகு வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக் கின்றோம். எமது ஒற்றுமையை கிறிஸ்தவ, இந்து, தமிழ் மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் உலகறியச் செய்ய வேண்டும். இதற்காக எமது குரல்கள் யாவும் ஒருமித்து ஓங்கி ஒலிக்கட்டும். வாழ்க தமிழ்! எழுக தமிழ்!

Share This Post

Post Comment