குடிவரவு , எல்லைப் பாதுகாப்பிற்காக $ 200 மில்லியனைக் கோரும் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம்

Thermo-Care-Heating

எதிர்வுகூறமுடியாததும், நிலையற்றதுமான தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை,  மற்றும் அரசின் குடிவரவு இலக்குகளை அடைதல் போன்றவற்றால் சூழப்பட்டுள்ள கனேடிய எல்லைப் பாதுகாவல் முகவரகம், மத்திய அரசிடம் இருந்து இவ்வாண்டிற்கான செலவினமாக $ 218 மில்லியன் தொகையைக் கோரியுள்ளது. இத்தொகை வழங்கப்படுமிடத்து, இத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி $ 2 பில்லியனை விட சற்றுக்குறைவானதாக இருக்கும். கனேடிய எல்லைப் பாதுகாவல் முகவரகம், கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடாவிற்குள் சட்டவிரோதமாக உட்புகும் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும் இக்கால கட்டத்தில், கனேடிய எல்லைப் பாதுகாவல் முகவரகத்திற்கு வழங்கப்படவேண்டிய வளங்களை லிபரல் அரசு அதிகரிக்க வேண்டும் எனப் பழமைவாதக் கட்சியின் பொதுப்பாதுகாப்பு விமர்சகர் Tony Clement அவர்கள் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment