கனேடிய பாடகி எலிசபெத் மாலினிக்கு இசையமைப்பாளர் டி.இமான் புகழாரம் !!

கனேடிய கலைஞர்களில்  ஒருவரும் நீண்ட காலம் இசைத்துறையில் சாதனை படைக்க காத்திருந்தவருமான எலிசபெத் மாலினி தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமானின் இசையில் பாடியுள்ளார். எலிசபெத் மாலினியின் இசைப் பயணம் குறித்து குருவி வாசகர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள் என்பதால் இதனை விரிவாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை. விஜய் தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் தொலைகாட்சி இசைப் போட்டியில் பங்கு பெற்று மக்களின் மனங்களை கவர்ந்த இளைய ஈழக் கலைஞர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா கந்தசுவாமி ஆலய புதிய ஆலய கட்டட நிதி்க்காக நடைபெற்ற மாபெரும் இசைப் பெருவிழாவான ” MUSIC BOSS IMAMAN ” நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை 12ம் திகதி பிரமாண்டமான Toronto International Center மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் டி.இமானின் இசையில் மேடையில் பாடகர் கார்த்திக்குடன் எலிசபெத் மாலினியும் பாடி அசத்தினார் . இதுவிடயமாக டி.இமானிடம் கேட்ட போது,

புதிய குரல்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்வது தனக்கு எப்போதும் பிடித்தமான ஒரு விடயமென்றும் அதற்காக திறமை இல்லாதவர்களுக்கு ஒரு போதும் வாய்ப்புத் தருவதில்லை. ஒருமுறை மூன்று வார கால விடுமுறைப் பயணமாக சென்னை வந்திருந்த போது எலிசபத் மாலினி தன்னை தொடர்பு கொண்டதையும், அவரின் வித்தியாமான மெல்லிய குரல் குறிப்பாக மேற்கத்திய சாயலைக் கொண்ட அந்தக் குரல் தனக்கு தேவைப்பட்டதால் அவருக்கு உடனடியாக வாய்ப்பு கொடுத்ததாகவும் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில் ,

ஒரு இசையமைப்பாளராக என்னுடைய பயணம் தமிழ் சினிமாவில் எத்தனை காலங்களுக்கு இருக்கும். மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆவேனா எனபதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னுடைய ஒரே ஆசை நாம் வாழும் காலத்தில் நம்மால் பிறருக்கு கொடுக்க முடியக் கூடிய சிறு சிறு சந்தோசத்தை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்பதே. என்னால் இன்னொருவரின் வாழ்வில் நன்மை நடக்கிறதென்றால் , வாய்ப்புக் கொடுக்க முடியும் அதற்கு அந்த நபர் தகுதியானவர் எனில் ஒரு எலிசபத் மாலினி மட்டுமல்ல பல புதிய குரல்களை அறிமுகம் செய்து கொண்டே தான் இருப்பேன் எனக் கூறினார்.

வாழும் நாள் முழுவதிலும் மனிதனாக வாழ வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என இசையமைப்பாளர் டி.இமான் பேசிய போது அரங்கம் அதிரும் கரவொலியைக் கேட்க முடிந்தது.

இந்நிகழ்வின் காணொளி 

இந்நிகழ்வின் மேலதிக புகைப்படங்களை பார்வையிட

http://images.biztha.com/Toronto-2016/DIMMAN-live-in-Toronto-Mar/

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini

Elisabeth Malini


Related News

 • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
 • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
 • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
 • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
 • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
 • கனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்
 • ஒட்டாவாவில் குளிர் காலநிலை ஆரம்பம்
 • விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் – ஹமில்டன் இளைஞன் கைது
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *