செப்ரெம்பர் 6 - கிட்செநேர்-வாட்டர்லூ , Vaughan தொகுதிகளில் இடைத்தேர்தல்
Aug 09 2012 10:18:05
ஒன்ரோறியோவில் காலியாக உள்ள இரண்டு சட்டசபைத் தொகுதிகளான கிட்செநேர்-வாட்டர்லூ , Vaughan ஆகியவற்றில் எதிர்வரும் செப்ரெம்பர் 6 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. நேற்று குயின்ஸ்பார்க்கில் முதல்வர் மககேன்றி இதனை அறிவித்தார்.
ஒன்ரோறியோ பகுதிகளில் உள்ள பாடசாலைகள் சிலவற்றிற்கு சுற்றுப் பயணம் செய்த பின்னர் முதல்வர் இதனை அறிவித்துள்ளதால் இடைதேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் பாடசாலை ஆசிரியர்கள் பிரச்சினைக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் விதத்தைப் பொறுத்தே தேர்தல் வெற்றிகள் அமையும் என கருதப்படுகிறது.
நாட்டின் கடன் சுமையை தீர்க்கும் விடயத்தில் பிற துறைகளைப் போல் ஆசிரியர்களும் அரசுக்கு உதவ முன் வர வேண்டும் எனவும் இரண்டு வருட ஊதிய உயர்வு இடைநிறுத்தம் , நோய் விடுப்பில் மாற்றங்கள் ஆகியவற்றுடன் கூடிய அரசின் புதிய ஒப்பந்தங்களில் விரைவில் ஆசிரியர்கள் கைசாத்திட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என லிபரல் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக அரசுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்குமிடையே கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த மாதம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஒரு சில ஆசிரியர் அமைப்புக்களும் , கத்தோலிக்க ஆசிரியர் சங்கமும் அரசின் ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொள்வதாய் அறிவித்து விட்டன. ஆனால் ஒன்ரோறியோ ஆரம்ப மற்றும் உயர் நிலை பாடசாலைகள் பேரவை அரசின் ஒப்பந்தங்களுக்கு இன்னமும் செவிசாய்க்கவில்லை,
இந்த பேரவைகளின் முடிவு இரு தொகுதிகளிலும் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என நம்பப்படுகிறது,. இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மக்கென்றி தலைமையிலான அரசு பெரும்பான்மை அரசாக சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும் என்பதால் தேர்தலுக்கு முன்னதாக ஆசிரியர்களை சரிக்கட்டும் நடவடிக்கைகளிலும் அரசு இறங்கும் என சிலர் எதிர்நோக்குகின்றனர்.
May 25 2013 09:55:38 [Canada]
இன்று வயதானவர்களை புறந்தள்ளும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் நாளை நமக்கும் அதே கதி என்பதைத் தான். அந்த வகையில் ஒரு வகையில் கனடாவில்
Read More >
May 25 2013 09:53:31 [Canada]
ஈழத்து நடனக் கலைஞன் பிறேம் கோபாலின் நெறியாள்கையில் பல கனேடிய இளம் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் வலி சுமந்த மண்
Read More >
May 25 2013 09:45:32 [Canada]
ரொறொன்ரோ மாநகர முதல்வர் சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து கொக்கெய்ன் பிடித்தது போன்று வெளியான காணொளி விவகாரங்களில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காணொளி வெளியாகி 7 நாட்கள் ஆன பின்னரும்
Read More >
May 25 2013 09:43:38 [Canada]
ஒரு நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் இப்படியொரு கேள்வியை ஒரு குழந்தை கேட்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. மெக்டொனல்ட்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. பிரமானடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில்
Read More >
May 25 2013 09:40:35 [Canada]
பிரித்தானியாவின் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளோரின் மெத்தனப் போக்கே மக்கள் நெரிசல் மிகுந்த பிரித்தானிய சாலையில் நேற்று அந்நாட்டின் ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
Read More >
May 25 2013 09:32:58 [Canada]
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,
Read More >
May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச்
சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி
Read More >
May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு
Read More >
May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை
Read More >