" பல மில்லியன் வாக்காளர்களின் விபரங்களைக் காணவில்லை " - ஒன்ரோறியோ தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Jul 22 2012 09:41:19
ஒன்றோரியோவின் 20-25 தேர்தல் மாவட்டங்களில் உள்ள பல மில்லியன் வாக்காளர்கள் குறித்த தகவல்கள் காணாமல் போயுள்ளதாக ஒன்ரோறியோ தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. வாக்காளர்களின் முக்கிய விபரங்களாகக் கருதப்படும் பெயர் , முகவரி , பாலினம் , பிறந்த திகதி மற்றும் கடந்த தேர்தலில் அவர் வாக்களித்துள்ளாரா உள்ளிட்ட பல விபரங்கள் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் காணாமல் போயுள்ளதாக குயின்ஸ் பார்க்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றோரியோவின் முதன்மை தேர்தல் அதிகாரி கிரேக் எஸ்சென்சா அறிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் முதலே காணமல் போயுள்ளது குறித்து இவ்வளவு தாமதமாக தேர்தல் ஆணையம் யூலை மாதத்தில் மக்களிடம் அறிவிப்பது ஏன் என பலர் கேள்விஎழுப்பத் தொடங்கியுள்ளனர். மக்களின் அடையாளத்தை திருடும் சதிகாரர்கள் செய்த வேலையாகவும் இது இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
மக்கள் தொடர்பான விபரங்களை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும் அவை காணாமல் போன பட்சத்தில் உடனடியாக அவற்றினை வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் இவ்வளவு நாள் மூடி மறைத்தது ஏன் என புதிய ஜனநாயகக் கட்சியின் சட்டசபை உறுப்பினர்களுள் ஒருவரான ஜக்மீத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
Essex,Etobicoke Centre,Kingston and the Islands,Newmarket—Aurora,Nipissing,
Ottawa West—Nepean,Stormont—Dundas—South Glengarry,Whitby—Oshawa,
Ajax—Pickering,Bruce—Grey—Owen Sound,Windsor West,York Centre,York West,Burlington,Davenport,Don Valley East,Don Valley West,Algoma—Manitoulin,
Etobicoke—Lakeshore,Etobicoke North,Haliburton—Kawartha Lakes—Brock,
Ancaster—Dundas—Flamborough—Westdale,Halton,Hamilton Centre,Kitchener Centre,Kitchener—Conestoga,London—Fanshawe,London North Centre,London West,Mississauga South,Mississauga—Streetsville,Nepean—Carleton,Nickel Belt,
Northumberland—Quinte West,Ottawa South,Ottawa—Vanier,Peterborough,
Pickering—Scarborough East,Prince Edward—Hastings,Sarnia—Lambton,
Sault Ste. Marie,Brampton West,Scarborough—Agincourt,Simcoe—Grey,Simcoe North,Brant,Timiskaming—Cochrane,Timmins—James Bay,Toronto Centre
ஆகிய தொகுதிகளைச் சார்ந்த 2.4 மில்லியன் வாக்காளர்களின் விபரங்கள் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விபரங்களை அறிய விரும்பும் பொதுமக்களின் பிரதிநிதிகள் 1-888-ONT-VOTE (668-8683) என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.