முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் தி.மு.க.வில் இருந்து விலகினார்

 • ekuruvinight-date

  aranganayagam

  தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர், செ.அரங்கநாயகம்.

  அதனை தொடர்ந்து, ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வி துறை அமைச்சராக இருந்த இவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 4-9-2006 அன்று தி.மு.க.தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

  தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறை, கோவை (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறை என 4 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ள அரங்கநாயகம் தி.மு.க.வை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

  கோவையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த அவர் ’வேறு அரசியல் கட்சியில் இணைவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’ என்று தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>