எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: மு.க.ஸ்டாலின்

ekuruvi-aiya8-X3

Stalin-says-if-needed-DMK-will-vote-against-Edappadiஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி பழனிசாமி அணி என செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி அணியிலும், தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அவர்கள் அவ்வப்போது அமைச்சர்களையும், எடப்பாடி பழனிசாமி அணியையும் விமர்சித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியினர் நேற்று தலைமை கழகத்தில் அவசர கூட்டம் போட்டு அதில், “டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது, அவர் நியமித்த நிர்வாகிகள் நியமனமும் செல்லாது” என்று பரபரப்பு தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இதற்கு டி.டி.வி. தினகரன் பதிலடி கொடுத்தார். என்னை நீக்க எடப்பாடி பழனிசாமி அணிக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார். தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட மோதல் நிலவுகிறது.

இந்த நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டத்தை அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டினார். இதில் முதன்மை செயலாளர் துரைமுருகன், 65 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் தவிர தற்போதைய தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் குழப்பம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

கேள்வி:- அ.தி.மு.க. 3 அணிகளாக பிளவுபட்டு உச்சக்கட்ட குழப்பத்தில் உள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையை தி.மு.க. பயன்படுத்திக் கொள்ளுமா?

பதில்:- இது இப்போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை இல்லை. எப்போது ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணி, டி.டி.வி. தினகரன் அணி வந்ததோ அப்போதே அசாதாரண சூழ்நிலை வந்து விட்டது. தமிழகத்தில் மக்கள் இந்த ஆட்சியில் துயரத்திற்கும், துன்பத்திற்கும் ஆளாகி உள்ளனர். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு வர வேண்டும்.

கே:- அ.தி.மு.க. அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவீர்களா?

ப:- தேவைப்பட்டால் சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, முரசொலி செல்வம், மு.க.தமிழரசு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஜெ.அன்பழகன், பி.கே. சேகர்பாபு, மாதவரம் சுதர் சனம், தா.மோ.அன்பரசன், சுந்தர், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், உதயசூரியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மு.க. ஸ்டாலின் இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், முரசொலி பவள விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் மேடையில் வந்து நினைவு பரிசு பெற்றுக்கொண்டதற்கு வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டதற்கும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தார்.

முரசொலி வளர்ச்சிக்காக பாடுபட்ட மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முடிவில் மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் சால்வையும், சுவர் கடிகாரமும் வழங்கி பாராட்டினார்.

Share This Post

Post Comment