ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா

ekuruvi-aiya8-X3

N-Koreaகடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துள்ளதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.

இந்நிலையில், கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துள்ளதாக தென் கொரியா செய்தி நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், “இந்த சோதனையால் எல்லை தாண்டிய பதற்றம் நிலவி இருக்கிறது. தென் கொரியா-அமெரிக்கா இடையிலான கூட்டுப்பயிற்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் 9-ம் தேதி நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment