ஏழைகளுக்கு உதவ அனைவரும் காதி உடை அணியுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

ekuruvi-aiya8-X3

Modi-பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களிடையே மான் கீ பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். இந்த வகையில், 36-வது மான் கீ பாத் நிகழ்ச்சியில் இன்று மோடி பேசிய பொழுது ஏழைமக்களுக்கு உதவிசெய்வதற்காக அனைவரும் காதி உடைகளை பயன்படுத்த வேண்டும் என நாட்டுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
காதி என்பது வெரும் துணி மட்டுமல்ல, அது ஒரு கருத்து, ஒரு கொள்கை. சமீபகாலமாக காதி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. நிரந்தரமாக காதி உடைகளை அணியுங்கள் என்று நான் சொல்லவில்லை, நீங்கள் பயன்படுத்தும் துணிகளுள் ஒன்றாக அதை தேர்ந்தெடுங்கள்.
காதி உடைகளை பிரபலப்படுத்துவதற்காக, அக்டோபர் 2ம் தேதி முதல் அவ்வகை துணிகளுக்கு அரசு சலுகை வழங்க உள்ளது. இது காதி உடைகள் விற்பனையை அதிகரிப்பதோடு, காதி துணிகளை உற்பத்தி செய்யும் ஏழைகளின் வீடுகளில் தீபாவளிக்கு சந்தோஷமான விளக்குகள் எறிய வழிசெய்யும். காதி துணிகளின் மீது அதிகரித்து வரும் ஆர்வம், காதி துணி உற்பத்தியில் ஈடுபட்டுபவர்கள் மற்றும் அதோடு இணைக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.
காதிக்கு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புத்துயிர் கொண்டு வரவேண்டும். அதன்மூலம் உற்பத்தி சக்தியை அதிகரிக்கலாம், சூரிய சக்தியால் இயங்கக்கூடிய தறிகளை அறிமுகப்படுத்தலாம், பல ஆண்டுகளாக செயலற்று கிடக்கும் இந்திய பாரம்பரியத்திற்கு புத்துயிர் அளிக்கலாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரனாசியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடந்த சேவாபூரி காதி ஆசிரமம் தற்பொது புத்துயிர் பெற்று பல மக்களுக்கு வேலை அளித்து வருகிறது. இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பூட்டிக்கிடந்த பல காதி துணி தொழிற்சாலைகள் புத்துயிர் பெற்றுள்ளன.
மக்கள் காதியின் மகத்துவத்தை உணர தொடங்கிவிட்டனர். பெரிய நிறுவனங்களும் கூட தீபாவளி பரிசுகளில் காதி பொருட்களை கொடுக்க தொடங்கியுள்ளன. மக்களும் காதி பொருட்களை பரிசுகளை பறிமாறிக்கொள்ள தொடங்கியுள்ளனர். இயற்கையாக சில விசயங்கள் எவ்வாறு வளர்கிறது என்பதை நாம் இப்போது உணர்கிறோம்.
இவ்வாறு அவர் உறையாற்றினார்.

Share This Post

Post Comment