சிறீலங்காவில் 6 ஏக்கருக்கு விரிவாக்கப்படும் அமெரிக்கத் தூதரகம்!

ekuruvi-aiya8-X3

us-embassy-1 சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் 6 ஏக்கருக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது.

தற்போதுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஒட்டியதாக வாங்கப்பட்ட காணியை உள்ளடக்கியதாக பாரிய தூதரக கட்டடத் தொகுதியை அமெரிக்கா அமைக்கவுள்ளது.

இந்நிகழ்வில், அமெரிக்காவிலிருந்து வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கடல்கடந்த நிர்மாண செயற்பாடுகள் பிரிவின் முதன்மைப் பிரதிப்பணிப்பாளர் வில்லியம் மோசர் மற்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

புதிதாக அமைக்கப்படவுள்ள தூதரகத்தில் தூதரகப் பணியகம், மரைன் காவல்படைக்கான வதிவிடம், உதவிக் கட்டடங்கள் மற்றும் தூதரக பணியாளர்களுக்கான வதிவிடம் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது.

அத்துடன், புதிதாக அமைக்கப்படவுள்ள தூதரகமானது, தூதரகப் பணியாளர்களின் பாதுகாப்பு, நிலையான உறுதித்தன்மை மற்றும் நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

இதனை, ஒரு அமெரிக்க நிறுவனமே கட்டவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

us-embassy-2

Share This Post

Post Comment