எனது பெயரிலுள்ள டுவிட்டர் வலைத்தளத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை

Facebook Cover V02

goththaதான் டுவிட்டர் வலைத்தளத்தினை பயன்படுத்துவதில்லை என்றும், தன்னுடைய புகைப்படத்துடன் போலி டுவிட்டர் வலைத்தளம் ஆரம்பித்துள்ளது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கோத்தாவின் டுவிட்டர் வலைத்தளத்தில் விடுதலைப்புலிகளினுடனான யுத்தத்தை வெற்றிக்கொள்ள 9 இராணுவத் தந்திரோபயங்களை பயன்படுத்தியதாக அவரது வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், பல வருடங்களுக்கு முன்பு கோத்தாவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அது பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செய்தி சேவை ஒன்றிற்கு தான் வழங்கிய செவ்வி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நேற்று டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவலுக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment