துபாயில் நடந்த சாலைவிபத்தில் இந்தியர் பலி

ekuruvi-aiya8-X3
kerla_man_18கேரள மாநிலம், திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சன்னி( வயது 46) என்பவர் கடந்த 24 ஆண்டுகளாக இங்குள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சன்னியின் மனைவி மற்றும் இருமகன்கள் விடுமுறையை கழிக்க துபாய்க்கு வந்திருந்தனர்.
அங்குள்ள முஹைஸ்னா நகரில் உள்ள பிரபல தேவாலயத்துக்கு குடும்பத்தாருடன் பிரார்த்தனை செய்யச் சென்ற சன்னி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் காரின்மீது அவ்வழியாக வந்த மற்றொரு சொகுசு கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சன்னி மற்றும் அவரது மூத்த மகனான ஆல்வின்(11) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த அவரது மனைவி ஜோலி, இளைய மகன் எட்வின்(4) ஆகியோர் இங்குள்ள ரஷித் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share This Post

Post Comment