தாசில்தார் தேர்வு ஹால்டிக்கெட்டில் கழுதை படம்

Facebook Cover V02

donkey_hallticketஜம்மு காஷ்மீரில் நடைபெற இருந்த தாசில்தார் தேர்விற்கான ஹால்டிக்கெட்டில், கழுதை படம் அச்சிடப்பட்டிருந்த சம்பவம், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் மெகபூபா முப்தி சயீத் தலைமையிலான பாரதிய ஜனதா உடனான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்பொருட்டு, மாநில பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தாசில்தார்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நாளை (29ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

கச்சூர் கார் என்பவரது ஹால்டிக்கெட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக, கழுதையின் படம் இடம்பெற்றிருந்த சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் அதனை, சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவைகளில் பகிர்ந்தார்.

காட்டுத்தீ போல பரவிய இப்பதிவு, சமூகவலைதளங்களில் வைரலாகி, பெரும் விவாதப்பொருளாக மாறியிருந்த நிலையில், அந்த ஹால்டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு புது ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று பணியாளர் தேர்வாணையம தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment