டொனல்ட் டிரம்ப் பேரணி ஒத்திவைப்பு – ஆதரவாளர்களுக்கும் , போராட்டக்காரர்களுக்குமிடையே கடும் தகராறு !!

ekuruvi-aiya8-X3

தேர்தல் பரப்புரைகளின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் முன்னணியில் இருந்து வந்த டொனல்ட் டிரம்ப் நேற்று சிகாகோவில் மாபெரும் பேரணி ஒன்றில் பங்கேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பேரணியை நடத்த விடாமல் திரண்ட டொனல்ட் டிரம்ப்பின் எதிர்ப்பாளர்கள் போராட்டங்களில் குதித்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக பேரணி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் திட்டமிட்டபடி மற்றொமொரு நாள் பேரணியை நடத்தியே தீருவோம் என டொனல்ட் டிரம்ப் சார்பில் அறிவிப்புக்கள் வெளியாகின. இலினோயிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டிருந்த டொனல்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடையே இந்த அறிவிப்பு வெளியான பின்னர் சிறிய சுணக்கம் ஏற்பட்டது.

உடனடியாக பல்கலைக்கழக அரங்கில் கட்டுக்கடங்காமல் வந்த எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டங்களுக்குப் பின்னர் டிரம்பால் பேரணி நடத்த முடியாமல் போனது கண்டு பெருமகிழ்ச்சியடைந்துடன் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டதாக பேரு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்களுக்கு டிரம்ப் வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் கோஷமிடத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்புக்குமிடையில் தகராறு முற்றி விடக் கூடாது என்பதற்காகவே பேரணியை டிரம்ப் ஒத்தி வைக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது. இருப்பினும் இரு தரப்புக்கிடையில் சண்டை நடந்த இலினோயிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் டிரம்ப் இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை.trump-violence-AP

Share This Post

Post Comment